தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode Bypoll: சீமானுக்கும் ஈபிஎஸ்க்கும்தான் போட்டியே! கலாய்த்துவிட்ட புகழேந்தி!

Erode Bypoll: சீமானுக்கும் ஈபிஎஸ்க்கும்தான் போட்டியே! கலாய்த்துவிட்ட புகழேந்தி!

Kathiravan V HT Tamil

Feb 24, 2023, 02:09 PM IST

சீமானுடன் தகராறு செய்யும் திமுகவினர், மீசையை பற்றி பேசிய ஈபிஎஸிடம் தகராறு செய்யாது ஏன்? என்ன நடக்கிறது அங்கே? - புகழேந்தி கேள்வி
சீமானுடன் தகராறு செய்யும் திமுகவினர், மீசையை பற்றி பேசிய ஈபிஎஸிடம் தகராறு செய்யாது ஏன்? என்ன நடக்கிறது அங்கே? - புகழேந்தி கேள்வி

சீமானுடன் தகராறு செய்யும் திமுகவினர், மீசையை பற்றி பேசிய ஈபிஎஸிடம் தகராறு செய்யாது ஏன்? என்ன நடக்கிறது அங்கே? - புகழேந்தி கேள்வி

சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில், 

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

அதிமுக இனிமேல் எடப்பாடி பழனிசாமி கைகளில்தான் உள்ளது போல் பலர் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக வாசிக்காதது தவறான செய்திகள் ஊடகங்களில் பரப்பப்படுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு நகல் என்னிடம் உள்ளது. இப்போதுதான் போராட்டமே தொடங்கி உள்ளது. தீர்ப்பு நகலில் ஈபிஎஸை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு தீர்மானம் குறித்து எங்குமே இல்லை. 

மேலும் இது தொடர்பான வழக்கு எந்த நீதிமன்றத்தில் உள்ளதோ அங்கே சென்று வாதித்திட்டு கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

பொதுக்குழு நடந்தது சரி என்று மட்டுமே உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளது. ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் சரி என்று எங்குமே சொல்லவில்லை.  தற்போதைய தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவில் உள்ள எந்த தொண்டனும் வழக்கு தொடர முடியும். நிரந்தர பொதுச்செயலாளராக அம்மாவை நீக்கியதற்கு எதிராக நானும் வழக்குத் தொடர உள்ளேன்.

ஈரோடு கிழக்கில் பணமழை பொழிகிறது. சீமானுடன் தகராறு செய்யும் திமுகவினர், மீசையை பற்றி பேசிய ஈபிஎஸிடம் தகராறு செய்யாது ஏன்? என்ன நடக்கிறது அங்கே?

எடப்பாடி பழனிசாமி இரண்டாவது இடத்திற்குத்தான் போராட்டி வருகிறார். அங்கு சீமான் உடன்தான் போட்டியே;அங்கு அவரால் ஒன்றுமே செய்ய முடியாது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி