தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sanatana: சனாதனம் குறித்த கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் - அமைச்சர் உதயநிதி

Sanatana: சனாதனம் குறித்த கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் - அமைச்சர் உதயநிதி

Marimuthu M HT Tamil

Nov 06, 2023, 02:35 PM IST

சனாதனம் குறித்து கருத்தை ஒருபோதும் திரும்பப் பெறப்போவது இல்லை என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சனாதனம் குறித்து கருத்தை ஒருபோதும் திரும்பப் பெறப்போவது இல்லை என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

சனாதனம் குறித்து கருத்தை ஒருபோதும் திரும்பப் பெறப்போவது இல்லை என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

'சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. அதிலிருந்து தான் பின்வாங்க மாட்டேன்' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும், அவரது கட்சியினரும் அமைச்சர் உதயநிதி முன்னிலையில் பங்கேற்றனர். அந்த நிகழ்வுக்குப்பின், செய்தியாளர் சந்திப்பில் பங்கெடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், சனாதனத்துக்கு எதிரான மாநாட்டில் பங்கெடுத்தது தவறு என்றும், காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அது குறித்த தங்களின் பார்வை என்ன என கேள்வி எழுப்பினர். 

அதற்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி, ‘ நான் பேசியது எதுவும் தவறு கிடையாது. எதையும் சட்டப்படி சந்திப்போம். நான் சொன்ன வார்த்தையில் இருந்து மாற்றிக்கொள்ளமாட்டேன். எனது கொள்கையைத் தான் நான் பேசியுள்ளேன். அம்பேத்கர் பேசியதைவிட நான் ஒன்றும் பெரிதாகப் பேசவில்லை. நான் தந்தை பெரியார் பேசியதை விட நான் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. எழுச்சித் தமிழர் திருமாவளவன் அண்ணன் பேசியதை விட நான் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. நான் பேசியது சரி தான். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். அமைச்சர் பதவி இன்று வரும். நாளைக்குப் போகும். இளைஞரணி பதவி இன்று வரும் நாளை போகும். நான் மனிதனாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்பேன். முதலில் இந்த நீட் தேர்வை ரத்து செய்வோம். நூறாண்டுகால சனாதனப் பிரச்னையை எதிர்ப்போம்’என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி