தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani: யாரிடமும் பணமோ, பொருளோ பெற்று சேவை செய்யவில்லை - கலக்கபோவது யாரு புகழ் பாலா பளிச்

Palani: யாரிடமும் பணமோ, பொருளோ பெற்று சேவை செய்யவில்லை - கலக்கபோவது யாரு புகழ் பாலா பளிச்

Feb 01, 2024, 11:01 PM IST

பழனியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் மறைந்த சினிமா நடிகர் மற்றும் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பழனியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் மறைந்த சினிமா நடிகர் மற்றும் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பழனியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் மறைந்த சினிமா நடிகர் மற்றும் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அக்கரைப்பட்டியில் மகேஷ் கார்த்திக் மெட்ரிக் மேல் நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் 13ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் தொலைக்காட்சி புகழ் மற்றும் சினிமா நடிகருமான பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

இந்த நிகழ்ச்சியில் பாலா பேசியதாவது: "சேவை மனப்பான்மையுடன் நான் என்னுடைய பொருளாதாரத்தில் இருந்து மட்டுமே மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். யாரிடமும் பணமோ, பொருளோ பெற்றுக்கொண்டு சேவை செய்யவில்லை. மேலும் மற்றவர்களின் தேவை அறிந்தே தேவைப்படும் உதவியை, சேவையாக செய்கிறேன்" என்றார்.

இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மறைந்த சினிமா நடிகர் மற்றும் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்துக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினது. இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் ஹரி ஹரிமுத்து, விமல் குமார், அசோக்குமார் சுப்பிரமணி, மாசிலாமணி காளியப்பன் திருப்பதி, பாரதி கண்ணன், கவிஞர் வைர பாரதி, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் தாளாளர் கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி