தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Exclusive : பள்ளிகளில் சமூகநீதியியல் கட்டாய பாடம் – வலியுறுத்தும் ஆசிரியர்கள்

HT Exclusive : பள்ளிகளில் சமூகநீதியியல் கட்டாய பாடம் – வலியுறுத்தும் ஆசிரியர்கள்

Priyadarshini R HT Tamil

Aug 13, 2023, 10:01 AM IST

Nanguneri Incident : திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவருக்கும், அதை தடுக்க வந்த சகோதரிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.
Nanguneri Incident : திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவருக்கும், அதை தடுக்க வந்த சகோதரிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

Nanguneri Incident : திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவருக்கும், அதை தடுக்க வந்த சகோதரிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், நாங்குநேரியில் பட்டியலின மாணவன் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்தது தமிழக அரசு. சாதி, இன உணர்வுகளால் மாணவர்களிடையே உருவாகும் வன்முறைகளை தவிர்த்து, நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு வழிமுறைகள் வகுக்க குழு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

இந்நிலையில் பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் வருத்தம் தெரிவித்துவரும் வேளையில், கவிஞரும், பள்ளி ஆசிரியையுமான சுகிர்தராணி தனது முகநூல் பக்கத்தில் கொடுத்துள்ள பதிவில்,

 

நான் படிக்கும்போது பத்தாம் வகுப்புவரை இருந்த பாடங்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல் ஆகியவை.பிற்பாடு வரலாறு புவியியலும் ஒரே புத்தகமாக சமூக அறிவியல் என மாற்றப்பெற்றது.

இதுவரை இம்முறையே தொடர்கிறது. இப்போது சமகாலத்தில் சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடுகள், ஆண் பெண் பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மை மதவெறுப்பு போன்றவற்றைப் பற்றி தமிழும், சமூக அறிவியலும் மட்டுமே ஓரளவு மேலோட்டமாகத் தொட்டுச் செல்கின்றன. மாணவர்களிடையே மதிப்புக் கல்வியையும், விழுமியங்கங்களையும், சமூக நீதியையும் கற்பிக்கவும், வலியுறுத்தவும், செயல்படுத்தவும் பாடதிட்டத்தில் இடமில்லை. நீதிபோதனை மற்றும் கல்விசாரா செயல்பாடுகளுக்கான பாடவேளைகள் வாரத்திற்கு ஒன்றிரண்டு என்பதால் இவை முழுமையான விளைவை மாணவர்களிடையே ஏற்படுத்தும் என்பது ஐயமே.

எனவே மனித உரிமை கல்வி, பகுத்தறிவு, பாலினச் சமத்துவம், பாலியல் கல்வி, பெண் கல்வி, விழுமியங்கள், சமகால அரசியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘சமூக நீதியியல்’ என்னும் ஒரு புதிய பாடத்தை ஆறாவது பாடமாக ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஏன் கொண்டுவரக்கூடாது?

மேல்நிலைக் கல்வியில் சமூக நீதியியலை விருப்பப் பாடமாக வைக்கலாம். மருத்துவத் துறை, நீதித்துறை, காவல்துறை, சமூக நலத்துறை போன்ற துறைகளில் பணிபுரிய தேர்வு செய்யப்படும்போது 'சமூக நீதியியல்' பிரிவு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.

சமூகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முற்போக்காளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், முற்போக்கான எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்ற ஆளுமைகளை பகுதி ர ஆசிரியர்களாகவோ வருகை தரும் ஆசிரியர்களாகவோ நியமிக்கலாம்.

பத்தாம் வகுப்பு வரை ஆறு பாடங்களுக்கு 600 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதட்டும். மற்ற பாடங்களில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் 35 என்றால், ‘சமூக நீதியியல்’ பாடத்தில் 50 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என வைக்க வேண்டும்.

‘சமூக நீதியியல்' பாடத்தில் 100 மதிப்பெண்களில் 50 மதிப்பெண்கள் உரைநடைத் தேர்வாகவும், மீதி 50 மதிப்பெண்கள் புறச் செயல்பாடுகளுக்காகவும் மதிப்பிடலாம். புறச் செயல்பாடுகள் என்பவை உள்ளூரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, ஊர்க்காவல் படையில் இணைந்து செயல்படுவது, பள்ளியில் நடைபெறும் கலை, பண்பாட்டு நிகழ்வுகளில் அவர்களின் பங்களிப்பு, பள்ளியில் சக மாணவர்களோடு அவர்கள் நடந்துகொள்ளும் விதம், இப்பாடத்தில் தாங்கள் புரிந்து கொண்டதைக் வைத்து, கவிதை, கட்டுரை, கதைகள் எழுதுதல், குறும்படம் எடுத்தல் போன்றவை. இவற்றிற்கு 50 மதிப்பெண்கள் அளிக்கலாம்.

சமூக நீதியியல் பாடத்தை அறிமுகப்படுத்துவதில் பாடத்திட்ட வரையறை, நடைமுறைச் சிக்கல் போன்றவை இருந்தாலும், இந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்பதால் மாணவர்கள் படிப்பார்கள். போகப்போக மாணவர்களுக்கு ஆர்வத்தையும் சமூக அறிவையும் அது ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இது காலத்தின் கட்டாயம். மாணவர்களிடையே இப்படியாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

பாடம் - மதிப்பெண்கள்

தமிழ் - 100

ஆங்கிலம் - 100

கணிதம் - 100

அறிவியல் - 100

(தியரி 75,

செய்முறை 25)

சமூக அறிவியல் -100

சமூக நீதியியல் -100

(தியரி 50,

புறச்செயல்பாடுகள்

50)

 

ஒருவேளை, தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் என் கருத்துக்கு செவி சாய்த்தால் மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு பதிவிட்டுள்ளார் கவிஞரும், அரசுப்பள்ளி ஆசிரியருமான சுகிர்தராணி. இதற்கு பதிலளித்துள்ள நீதிபதி சந்துரு, இந்தக்கருத்துக்களை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி