தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ennore Ammonia Gas Leak Case: 5 மடங்கு அதிகமாக அமோனியா சேமித்ததே விபத்துக்கு காரணமா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Ennore Ammonia Gas Leak Case: 5 மடங்கு அதிகமாக அமோனியா சேமித்ததே விபத்துக்கு காரணமா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Jan 02, 2024, 03:58 PM IST

அமோனியா கசிவுக்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படும் என தெரிவித்த நீதிமன்றம், வாயு கசிவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
அமோனியா கசிவுக்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படும் என தெரிவித்த நீதிமன்றம், வாயு கசிவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

அமோனியா கசிவுக்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படும் என தெரிவித்த நீதிமன்றம், வாயு கசிவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூரில் பகுதியில் அமைந்திருக்கும் கோரமண்டல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு தொடர்பாக தென் மண்டல் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கின் விசாரணை பசுமை தீர்ப்பாயம் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்! வெளுக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Today Gold Rate : அடேங்கப்பா.. 54 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

மக்களே.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

இந்த வழக்கில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அமோனியம் வாயுக்கசிவு பாதிப்பு அதிகாலை 4 மணியளவில் உணரப்பட்டது. 20 நிமிடத்தில் கசிவு கட்டுப்படுத்தப்பட்டதுடன், வாயு வெளியேற்றமும் கட்டுக்குள் வந்தது.

தொழில்துறை பாதுகாப்பு சட்டம் 33(A) படி, வாயுக்கசிவை ஏற்படுத்திய நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் தொழில்துறை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. வாயு கசிவு காரணமாக பாதிப்பு அடைந்த குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோரமண்டல் நிறுவனத்தில் சுமார் 12 ஆயிரத்து 500 டன் அமோனியாவை திரவமாக சேகரித்து வைக்கு கொள்கலன் வசதி உள்ளது. கப்பலில் இருந்து கொண்டு வரப்படும் அமோனியா, நிறுவனம் உள்ளே எடுத்து செல்ல குழாய் வசதியும் உள்ளது.

அந்த குழாயில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம் காரணமாக கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குளிரூட்டும் கருவி சரியாக செயல்படாமல் இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாயு கசிவு காரணமாக சுமார் 60 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 5 பேரி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர.

கோரமண்டல் நிறுவனம் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அதன் கட்டமைப்புகளை கடல்சார் வாரியம் கண்காணித்து வருகிறது" என்று விளக்கம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து கோரமண்டல் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " கப்பலில் கொண்டுவரப்படும் அமோனியா உரிய ஆய்வு செய்யப்படும். அதுதொடர்பான அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த 1996 முதல் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவம் இதற்கு முன் நடந்தது இல்லை. எனவே இதுதொடர்பாக முழு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை" என்றார்.

இதையடுத்து வழக்கு தொடர்பாக தீர்ப்பாயம், " சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. விபத்து நடப்பதற்கு முன் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை? மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏன் நிறுவனத்தை தொடர்ந்து கண்காணக்கவில்லை? நிறுவனத்தில் முறையாக ஆய்வு நடத்தப்பட்டதா?

அந்த பகுதி மக்களுக்கு வாயு கசிவு பற்றிய விளைவுகள் தெரியுமா?. அமோனியாவை 5 மடங்கு அதிகமாக சேமித்து வைத்ததே வாயுகசிவுக்கு காரணம் என மாசுகட்டுப்பாடு வாரியம் குற்றம் சுமத்தியுள்ளது. அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.

அமோனியா கசிவுக்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படும் என கூறிய நீதிமன்றம், கடல்சார் வாரியம், மீன்வளத்துறை, தொழில்பாதுகாப்பு துறை இணைந்து இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. வழக்கை ஜனவரி 8ஆம் தேதி தள்ளி வைத்தது.

சென்னை அடுத்த எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் அமைந்திருக்கும் கோரமண்டல் தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நள்ளிரவில் வாயுக்கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் போன்ற உடல் நல பிரச்னைகள் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு உத்தரவிட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி