தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  எமர்ஜென்சி டோர் அருகே தயாநிதி மாறன் செய்த காரியம்! தேஜஸ்விக்கு டேக் செய்து நையாண்டி!

எமர்ஜென்சி டோர் அருகே தயாநிதி மாறன் செய்த காரியம்! தேஜஸ்விக்கு டேக் செய்து நையாண்டி!

Kathiravan V HT Tamil

Jan 21, 2023, 02:06 PM IST

பயணிகளின் அன்பான "அவசர" கவனத்திற்கு! என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் தயாநிதிமாறன்
பயணிகளின் அன்பான "அவசர" கவனத்திற்கு! என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் தயாநிதிமாறன்

பயணிகளின் அன்பான "அவசர" கவனத்திற்கு! என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் தயாநிதிமாறன்

சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் பயணம் செய்த பெங்களூரு தெற்கு தொகுதியின் எம்.பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. விமான பயணங்களின் போது பாதுகாப்பு விதிமுறைகளை பயணிகளுக்கு விளக்கும் வகையில் எமர்ஜென்சி டோர் எனப்படும் அவசர கால கதவை ஆபத்து நேரங்களில் பயன்படுத்துவது குறித்து விமான பணிப்பெண்கள் பயணிகளிடம் விளக்குவது வழக்கம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ’கை உடைந்த சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு!’ நீதி விசாரணை கேட்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கண்டனம்!

Weather Update: ‘3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

எமர்ஜென்சி கதவை திறந்த தேஜஸ்வி

அந்த வகையில் இந்த விளக்கம் தரப்பட்ட பின்னர் எமர்ஜென்சி கதவை தேஜஸ்வி திறந்ததாக கூறப்படுகிறது. இதையெடுத்து விமானம் ரன்வேயில் டேக் ஆப் ஆவதற்கு விமானம் நிறுத்தப்பட்டு, விமானத்தில் இருந்த பயணிகள் எல்லோரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு விமானத்தில் மீண்டும் பாதுகாப்பு சோதனைகள் அனைத்து சரி செய்யப்பட்டு சுமார் 2 மணி நேரம் விமானம் தாமதமாக எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்காக தேஜஸ்வி சூர்யா மற்றும் அண்ணாமலை ஆகியோரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கப்பட்டதாக கூறப்பட்டது.

பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா

இந்த விவகாரத்தை மாநில அளவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட் செய்து கண்டித்த நிலையில் தேசிய அளவில் காங்கிரஸ் முக்கிய விவாதமாக்கி இருந்தது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விமான அவசரகால கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் தவறுதலாக கதவை திறந்ததாகவும், இதற்காக தேஜஸ்வி மன்னிப்பு கேட்டுவிட்டார் என்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம் அளித்திருந்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை   -கோப்பு படம்

அண்ணாமலையில் புதிய விளக்கம்

இதற்கெல்லாம் ஒரு படிமேலாக அவசரகால கதவை தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை, அவர் தனது கைகளை அவசர வழிக்கதவி வைத்திருந்தார், அப்போது அவசர வழிக்கதவு சரியாக மூடப்படாமல் இருந்தது, இதனைதான் விமான பணியாளர்கள் கவனத்திற்கு தேஜஸ்வி கொண்டு சென்றார் அது அவரின் கடமை இது தொடர்பாக அனைத்து விளக்கத்தையும் விமான நிறுவனத்திற்கு தேஜஸ்வி அளித்துள்ளார், அதேபோல் அவர் மன்னிப்பு கேட்கவில்லை, விமான தாமதமானதற்காக பயணிகளிடம்தான் மன்னிப்பு கேட்டார் என தெரிவித்திருந்தார்.

தயாநிதிமாறன் வெளியிட்ட நைாண்டி வீடியோ

இந்த நிலையில், இன்றைய தினம் விமானம் ஒன்றின் எமர்ஜென்சி கதவின் பக்கத்தில் அமர்ந்து வீடியோ ஒன்றை திமுக எம்.பி தயாநிதி மாறன் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், இன்று கோவைக்கு இண்டிகோ விமான மூலம் பயணம் செய்கிறேன், எனக்கு கிடைத்த இருக்கை எமர்ஜென்சி டோருக்கு அருகே உள்ள இருக்கை, ஆயினும் நான் எமர்ஜென்சி கதவை திறக்கப்போவதில்லை, அப்படி திறந்தால் நான் மன்னிப்பு கடிதம் எழுத வேண்டியிருக்கும், அதுமட்டுமின்றி திறப்பதால் பயணிகளுக்கு ஆபத்து, அதுமட்டுமின்றி சுய அறிவு உள்ளவர்கள் இந்த காரியத்தை செய்யமாட்டாவர்கள், அதுமட்டுமின்றி விமான பயணிகளுக்கு 2 மணி நேரம் மிச்சமாகும், நன்றி இதை அனைவரும் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன் என கூறி அந்த ட்விட்டில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கும், பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி