தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tuticorin Rains: வடியாத வெள்ளம் .. பரிதவிக்கும் மக்கள்.. தூத்துக்குடியின் தற்போதைய நிலவரம் என்ன?

Tuticorin Rains: வடியாத வெள்ளம் .. பரிதவிக்கும் மக்கள்.. தூத்துக்குடியின் தற்போதைய நிலவரம் என்ன?

Karthikeyan S HT Tamil

Dec 20, 2023, 02:18 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3-வது நாளாக தண்ணீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3-வது நாளாக தண்ணீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3-வது நாளாக தண்ணீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.

வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் ஓரளவு வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. எனவே தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து பார்ப்போம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

  • தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3-வது நாளாக தண்ணீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.
  • தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீட்கப்பட்டாா். கடந்த மூன்று நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை காவல்துறை, தீயணைப்பு மீட்புத்துறையினா் பத்திரமாக மீட்டனர்.
  • தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்களில், மீட்பு பணிகளை ராணுவம் தொடங்கியுள்ளது. தற்போது உணவு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டன.
  • கடும் வெள்ளத்தால் பல கிராமங்கள் 3 நாட்களாக தொடர்பற்று இருந்த நிலையில், ராணுவம் அங்கு சென்று மீட்பு பணிகளை தொடங்கியது.
  • தூத்துகுடி அரசு மருத்துவமனை, நீதிமன்றம், காய்கறி சந்தை, புதிய பேருந்து நிலையம், சின்னகண்ணுபுரம், தேவர் காலனி, முத்தம்மாள் காலனி, மீளவிட்டான் அம்பேத்கர் நகர், கே.டி.சி நகர், ஆறாம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது.
  • தூத்துக்குடியில் பேரிடர் மீட்பு படையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டு மீட்பு, நிவாரணப் பணி நடக்கிறது.
  • வெள்ள பாதிப்புகள் குறித்து தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகளுடன் காணொலியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டாா்.

  • பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 5000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால், தாமிரபரணியில் நீர் வரத்து குறைந்தது.
  • தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, வெள்ளநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
  • காட்டாற்று வெள்ளம் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது.
  • பெருமழை வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை பிறந்தது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி, நேற்று மதியம் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணியான அனுசுயா (27) என்பவருக்கு, இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை பிறந்தது.
  • வரலாறு காணாத பெருமழையால் குளத்தூர், விளாத்திகுளம் வழியாக அருப்புக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் குளத்தூரை அடுத்த முத்துக்குமராபுரம் பகுதியில் பாலம் சேதமடைந்தது.  இதனால் அந்த வழித்தடத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
  • கனமழையால் தூத்துக்குடி நகர் பகுதி முழுவதும் 3 நாட்களாகியும் மின் விநியோகம் இல்லை. நெட்வொர்க்கும் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

  • தூத்துக்குடியில் சில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. இன்று காலை முதல் சுமார் 700 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படை தகவல் தெரிவித்துள்ளது.
  • தூத்துக்குடி புஷ்பா நகரில் வெள்ளம் சூழ்ந்த வீட்டில் சிக்கிக்கொண்ட கர்ப்பிணி பெண்ணை கனிமொழி எம்பி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
  • கனமழை, வெள்ளத்தால் கடந்த 3 நாட்களாக ரத்து செய்யபட்டிருந்த சென்னை – தூத்துக்குடி விமான சேவை மீண்டும் தொடங்கியது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் தடைபட்டிருந்த தூத்துக்குடி-திருநெல்வேலி போக்குவரத்து இன்று முதல் இயக்கப்பட்டது. மதுரை, கோவில்பட்டி, விளாத்திகுளம், உள்ளிட்ட நகரங்களுக்கு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து பகுதி பகுதியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
  • தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோரம்பள்ளம் பகுதி மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் ஏதும் கிடைக்காமல் இருப்பதால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி