தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  “நீதிமன்ற தீர்ப்பு சட்டமன்றத்தை கட்டுப்படுத்தாது”! அப்பாவு பேச்சால் Eps ஷாக்!

“நீதிமன்ற தீர்ப்பு சட்டமன்றத்தை கட்டுப்படுத்தாது”! அப்பாவு பேச்சால் EPS ஷாக்!

Kathiravan V HT Tamil

Feb 25, 2023, 01:58 PM IST

OPS vs EPS: அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவின் கருத்து அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
OPS vs EPS: அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவின் கருத்து அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

OPS vs EPS: அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவின் கருத்து அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுக்குழு

ட்ரெண்டிங் செய்திகள்

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் அக்கட்சி ஒருங்கிணைப்பாளராகவும் எதிர்க்கட்சித் துணைத்தலைவராகவும் இருந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஓ.பி.ரவிந்திரநாத், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் அடைப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாலராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மாற்றம்

மேலும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்க கோரியும் அதற்கு பதிலாக அப்பொறுப்புக்கு ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்யக்கோரியும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம் அதிமுக தரப்பில் கடிதம் அனுப்பட்ட நிலையில், சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இதனால் சட்டப்பேரவை கூட்டம் கூடும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் ஓ.பன்னீர் செல்வம் அமரும் நிலை தொடர்ந்தது. இதற்கு அதிமுகவினர் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

<p>சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின்போது அருகருகே உட்கார்ந்திருந்த இபிஎஸ் - ஓபிஎஸ்</p>

சட்டப்போராட்டம் தொடரும் - ஓபிஎஸ்

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என அறிவித்தது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பொதுக்குழு செல்லும் என்று மட்டுமே நீதிமன்றம் கூறி உள்ளதாகவும், பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து எந்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்காததால் சட்டப்போராட்டத்தை தொடர உள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக உறுப்பினரே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

உச்சநீதிமன்றம்

சபாநாயகர் அப்பாவு பேட்டி

அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, ”உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்துள்ளது, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை; சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது.

சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகள் அல்லது சட்டசபை நடைபெறும் இடங்கள் பேரவை தலைவரின் முழுப்பொறுப்பு, ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் சட்டப்பேரவைக்கும் எந்த தொடர்பும் இல்லை” எனக் கூறி உள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்  -கோப்புபடம்

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயக்குமாரை நியமிக்க சபாநாயகருக்கு அதிமுக தரப்பில் பரிந்துரை செய்தும் அதனை அவர் கண்டுகொள்ளாத நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு சபாநாயகரின் முடிவை மாற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்பாவுவின் பேட்டி அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி