தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore :ஹைட்ரஜனில் இயங்கும் Yali 2.o- அசத்தல் முயற்சியில் கோவை மாணவர்கள்!

Coimbatore :ஹைட்ரஜனில் இயங்கும் yali 2.o- அசத்தல் முயற்சியில் கோவை மாணவர்கள்!

Apr 28, 2023, 10:14 AM IST

yali 2.o: ஹைட்ரஜன் மூலம் இயங்கும் yali 2.o படகை தயாரித்த கல்லூரி மாணவர்கள் கொண்ட இந்த அணிக்கு டீம் ஸீ சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.
yali 2.o: ஹைட்ரஜன் மூலம் இயங்கும் yali 2.o படகை தயாரித்த கல்லூரி மாணவர்கள் கொண்ட இந்த அணிக்கு டீம் ஸீ சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.

yali 2.o: ஹைட்ரஜன் மூலம் இயங்கும் yali 2.o படகை தயாரித்த கல்லூரி மாணவர்கள் கொண்ட இந்த அணிக்கு டீம் ஸீ சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் yali 2.o படகை வடிவமைத்துள்ளனர். சர்வதேச அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் இந்தியாவில் இருந்து இந்த கல்லூரி அணி மட்டுமே பங்கேற்கின்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

கோவையில் உள்ள தனியார் கல்லூரி (KCT) மாணவர்கள் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் yali 2.o படகை வடிவமைத்துள்ளனர். இதன் அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் இன்று மாலை நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் கோவை மண்டல நேவி (navy) கமாண்டெண்ட் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஹைட்ரஜன் மூலம் இயங்கும் yali 2.o படகை தயாரித்த கல்லூரி மாணவர்கள் கொண்ட இந்த அணிக்கு டீம் ஸீ சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மொனாக்கோ எனர்ஜி(MEBC) அமைப்பு கடல்சார் துறையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் படகுகளை உருவாக்க மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக சர்வதேச அளவில் போட்டிகளை நடத்தி வருகின்றது. இந்த சர்வதேச அளவிலான படகு வடிவமைப்பு போட்டிகளில் கனடா, இத்தாலி, துபாய், இந்தோனேசியா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கிரீஸ் உட்பட்ட 11 நாடுகளை சேர்ந்த 17 அணிகள் பங்கேற்கின்றது. இதில் இந்தியாவில் இருந்து கோவை தனியார் கல்லூரி (KCT) அணி மட்டுமே பங்கேற்கின்றது.

இதுகுறித்த பேசிய மாணவர்கள், "கடந்த முறை போட்டியில் பங்கேற்ற பொழுது பேட்டரி மற்றும் சோலார் ஆகிவை மட்டுமே படகுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் சர்வதேச அளவில் பிற போட்டியாளர்களை பார்த்த பின்னால் ஹைட்ரஜன் மூலம் இயக்கும் படகை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த படகில் பேட்டரி, சோலார், ஹைட்ரஜன் ஆகிய 3 ம் பயன் படுத்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட படகின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. வெளிநாட்டு மாணவர் அணியுடன் போட்டியிடும் அளவிற்கு தயாராக உள்ளோம். மேலும் தொழில்நுட்ப ரீதியாகவும் போட்டியிட தயாராக உள்ளோம் என்று தெரிவித்தனர்.

கீரின் எனர்ஜி படகுகள் சுற்றுசுழலுக்கு உகந்தவை. இந்த டெக்னாலஜி கடற்படைக்கு வரும் போது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் எனவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அறிமுக விழாவில் கலந்து கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப் கல்லூரி மாணவர்களின் முயற்சியை வெகுவாக பாராட்டினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி