தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Fire Accident: பட்டாசு ஆலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு நிதி

Fire Accident: பட்டாசு ஆலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு நிதி

Aarthi V HT Tamil

Mar 16, 2023, 12:58 PM IST

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் அறிவித்து உள்ளார்.
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் அறிவித்து உள்ளார்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் அறிவித்து உள்ளார்.

தருமபுரி: பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன். இவருக்கு அதே ஊரில்  சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

இந்த நிலையில் இன்று ( மார்ச் 16 ) காலை பட்டாசு தயாரிப்பு பணியாளர்கள் வேலைக்கு வந்தபோது பட்டாசுக்கு தேவையான எரிபொருளை நிரப்பினர். அப்போது திடீரென ஏற்பட்ட தீப்பற்றியால் குடோன் வெடித்து சிதறியது. 

இதில் பணிபுரிந்து வந்த மேச்சேரி வெள்ளாறு பகுதியைச் சேர்ந்த கணபதி மனைவி பழனியம்மாள் ( 50), நாகரசம்பட்டி சேர்ந்த காவிரி மனைவி முனியம்மாள் (60) ஆகியோர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அவர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த இரண்டு பெண்களுக்கு நிதியுதவி அறிவித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 

இது குறித்து வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், “ தருமபுரி மாவட்டம். பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி உள்வட்டம், நாகதாசம்பட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் நாகதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி முனியம்மாள் க/பெ.காவேரி (வயது 65) மற்றும் சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த திருமதிபழனிம்மான் க/பெபூபதி (வயது 50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 

மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் அறிந்தேன். மேலும், இவ்விபத்தில் கடுமையான காயமடைந்து பென்னாகரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு.சிவலிங்கம், த/பெ.பொன்னுமாலை (வயது 52) அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும். கடும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிவலிங்கத்திற்கு 1 லட்சம் ரூபாய்யை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் “ குறிப்பிடப்பட்டு இருந்தது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி