தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பாலியல் புகார்..கைதாகிறாரா விசிக நிர்வாகி, பிக்பாஸ் புகழ் விக்ரமன்? - 13 பிரிவுகளில் வழக்கு பதிவு!

பாலியல் புகார்..கைதாகிறாரா விசிக நிர்வாகி, பிக்பாஸ் புகழ் விக்ரமன்? - 13 பிரிவுகளில் வழக்கு பதிவு!

Karthikeyan S HT Tamil

Oct 29, 2023, 04:31 PM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியும் பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய போலீஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியும் பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய போலீஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியும் பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய போலீஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை வடபழனி காவல்நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த கிருபா முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் லண்டனில் ஆய்வு பட்டமும் பெற்றுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார்.

அந்த புகார் மனுவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமனும் நானும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம். அவர் என்னை காதலிப்பதாக சொல்லி சட்டரீதியாக திருமணமும் செய்துக் கொள்ளும்படி அவரிடம் கூறினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார். என்னை காதலிப்பதாக சொல்லியே ரூ 13.7 லட்சம் பணம் வாங்கினார். அதில், ரூ 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டார். மீதி ரூ 1.7 லட்சம் திருப்பி தர வேண்டும். என்னை காதலிப்பதாக சொல்லி மோசடி செய்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையிடம் புகார் கொடுத்தேன். ஆனால், இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த புகாருக்கு விக்ரமன் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், கிருபா முனியசாமி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விக்ரமன் மீது போலீஸார் வழக்கப்பதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமை, திருமண மோசடி, பாலியல் வன்கொடுமை, எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி