தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sofia Case: தமிழிசைக்கு எதிராக விமானத்தில் கோஷம்..மாணவி சோபியா வழக்கில் அதிரடி தீர்ப்பு

Sofia Case: தமிழிசைக்கு எதிராக விமானத்தில் கோஷம்..மாணவி சோபியா வழக்கில் அதிரடி தீர்ப்பு

Karthikeyan S HT Tamil

Aug 16, 2023, 01:01 PM IST

விமானத்தில் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தூத்துக்குடி மாணவி லூயிஸ் சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விமானத்தில் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தூத்துக்குடி மாணவி லூயிஸ் சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விமானத்தில் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தூத்துக்குடி மாணவி லூயிஸ் சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்த்த லூயிஸ் சோபியா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் நான் படித்து வருகிறேன். கடந்த 2018-ல் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தேன். அதே விமானத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற நேரம். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. இதனால், விமானத்தில் இருந்து இறங்கும்போது மத்திய அரசை விமர்சித்து கருத்து தெரிவித்தேன்.

ட்ரெண்டிங் செய்திகள்

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

அதைக் கேட்ட தமிழிசை சவுந்தரராஜன், விமான நிலையத்தில் என்னை மிரட்டும் நோக்கத்தில் என்னைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். ஆனால், அவரது புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீசார் என் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரரான தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பதவி வகித்து வருவதால் அவர் விடுவிக்கப்பட்டு, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார். தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பில், எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. இந்த மனுவின் முந்தைய விசாரணையின் போது பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில், விமான நிலையத்தில் கோஷமிட்டது குற்ற செயலாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல்துறைக்கான சட்டப்பிரிவை தூத்துக்குடி போலீசார் பயன்படுத்தி உள்ளனர். இதுபோன்ற சட்டப்பிரிவுகளை சென்னை, கோவை போன்ற காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது. சென்னை காவல்துறை சட்டப்பிரிவை தூத்துக்குடி போலீசார் பயன்படுத்த அதிகாரம் இல்லை என வாதத்தை முன்வைத்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மாணவி லூயிஸ் சோபியா மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி