தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Accident: சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்து - இருவர் பலி

Accident: சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்து - இருவர் பலி

Marimuthu M HT Tamil

Nov 13, 2023, 02:55 PM IST

சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

சென்னை அண்ணா நகரில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் உட்பட 6 பேர் மீது கார் மோதிய விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இருவர் உயிரிழந்துள்ளனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

சென்னை அண்ணா நகரில் நள்ளிரவு அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் நின்றிருந்தவர்கள், தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் என ஆறு பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது அதிவேகமாக வந்த கார் சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி அங்கிருந்தவர்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் காரை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. குறிப்பாக,கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறுபேரில் இரண்டு பேர் கவலைக்கிடமான முறையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சந்தோஷ் மற்றும் நாக சுந்தரம் ஆகியோர் தற்போது சிகிச்சைப் பலனின்றி உயரிழந்தனர். அதில்  காரில் இருந்த மூன்று பேரில் இரண்டு பேர் தப்பி ஓடிவிட்ட நிலையில், பிடிபட்ட ஒருவரை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  அவர் கல்லூரி மாணவர் என்பதும் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. உயிரிழந்த இருவரில் ஒருவர் கல்லூரி மாணவர் என்பதும் மற்றொருவர் காவலாளி எனவும் தெரியவந்துள்ளது. மேலும் அதிவேகமாக வந்து விபத்தினை ஏற்படுத்திய காரை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த செய்தி