Bus Stop : கடலூர்-நெய்வேலி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்.. மக்கள் அவதி!
Jul 28, 2023, 03:53 PM IST
போராட்டத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, கடலூர்-நெய்வேலி வழிதடத்தில் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
நெய்வேலியில் பாமக நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக கடலூர்-நெய்வேலி மார்க்கத்தில் செல்லும் தொலைதூர அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
முன்னதாக, என்.எல்.சி நிறுவனம் விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர். இதனிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர்.
இதனால் அங்கு பரப்பரபான சூழல் நிலவி வருகிறது. என்எல்சி நிறுவன முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் பாமக தொண்டர்கள் போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைத்து கலவரத்தில் ஈடுப்பட்டனர். மேலும் இந்த கலவரத்தில் நான்கு பேருக்கு தலையில் அடிப்பட்டது.
தடுப்புகளை மீறி போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு நடத்தினர். தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வானத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்து வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 12 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
போலீசார் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.