தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்ட விஜய்!

Tamil Live News Updates: விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்ட விஜய்!

HT Tamil Desk HT Tamil

Dec 28, 2023, 10:33 PM IST

Tamil Live News Updates: இன்றைய (28.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tamil Live News Updates: இன்றைய (28.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Tamil Live News Updates: இன்றைய (28.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

விஜயகாந்த் உடலுக்கு விஜய் அஞ்சலி

RIP Captain Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : அடேங்கப்பா.. 54 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

மக்களே.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

Weather Update: ’கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை!’ தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் விஜயகாந்த் உடல் 

RIP Captain Vijayakanth: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திடன் உடல் நாளை காலை 6 மணி முதல் தீவுத்திடலில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிப்பு 

அன்புமணி, திருமா அஞ்சலி

RIP Captain Vijayakanth: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ள்இட்டோர் அஞ்சலி

இளையராஜா அஞ்சலி

RIP Captain Vijayakanth: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா அஞ்சலி

அண்ணாமலை அஞ்சலி

RIP Captain Vijayakanth: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அஞ்சலி 

இயக்குநர் மாரிசெல்வராஜ் அஞ்சலி

RIP Captain Vijayakanth: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் அஞ்சலி

எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

RIP Captain Vijayakanth: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

பொன்முடி அஞ்சலி

RIP Captain Vijayakanth: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்

வி.கே.சசிகலா அஞ்சலி

RIP Captain Vijayakanth: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு வி.கே.சசிகலா அஞ்சலி

பவன் கல்யாண் இரங்கல்

RIP Captain Vijayakanth: 2005-ல் திரு.விஜயகாந்த் கட்சியை அறிவித்த நாளில் மதுரை பகுதியில் படப்பிடிப்பில் இருந்தேன். அங்குள்ள மக்களின் புரட்சியை, சந்தோஷத்தை நேரடியாகப் பார்த்தேன். திரு.விஜயகாந்த் மக்கள் பக்கம் நிற்கும் விதமும், ஒரு பிரச்சனை வரும் போது போராடி துணை நிற்கும் விதமும் போற்றத்தக்கது. துன்பத்தில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகுமுறையுடன் பதிலளித்தார். தனது முதல் அடியில் அவர் சந்தித்த முடிவுகளால் மனம் தளராமல் அரசியலில் நின்றார். இது அவரது போராட்ட குணத்தை காட்டுகிறது - ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் இரங்கல் 

மக்களிசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

RIP Captain Vijayakanth: சென்னையில் இன்று நடக்கவிருந்த 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி ‘கேப்டன்’ விஜயகாந்த் மறைவையொட்டி ஒத்திவைக்கப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளாா்.

விஜயகாந்த் உடல் நாளை நல்லடக்கம்

RIP Captain Vijayakanth:தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை

RIP Captain Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திரைப்பட படப்பிடிப்புகள் நாளை ரத்து

RIP Captain Vijayakanth: விஜயகாந்தின் மறைவை ஒட்டி நாளை அனைத்து விதமான திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

பிரேமலதா கோரிக்கை

RIP Captain Vijayakanth:தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய முதல்வர் ஸ்டாலினிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

விஜயகாந்த் மறைவு - பொதுமக்கள் அஞ்சலி

RIP Captain Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்னும் சற்று நேரத்தில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட உள்ளது.

விஜயகாந்த் மறைவு- திரையரங்குகளில் காலை காட்சி ரத்து

RIP Captain Vijayakanth:தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் காலமானார்

Vijayakanth: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Weather Update: தென் தமிழ்நாட்டில் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பா் 31ம் தேதி வேலைநாள்

Ration Shop: திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகள் டிசம்பர் 31ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண தொகை விநியோகப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமலாக்கதுறை சோதனை

Enforcement Directorate: சென்னையில் பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் அமலாக்கதுறையினா் சோதனை நடத்தி வருகின்றனா். கொளத்தூர் சிவ பார்வதி நகரில் அமைந்துள்ள முத்து என்பவர் வீட்டில், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் அமைந்துள்ள கணேஷ் என்பவர் வீட்டில், பெசன்ட் நகரில் தொழிலதிபர் ரவி ராம் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை

Vijayakanth: கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட்

PAK vs AUS: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 264 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

அடுத்த செய்தி