தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Fraud Case: பிக்பாஸ் பிரபலம் ராபர்ட் மாஸ்டரின் தங்கை கைது!

Fraud Case: பிக்பாஸ் பிரபலம் ராபர்ட் மாஸ்டரின் தங்கை கைது!

Mar 09, 2023, 01:38 PM IST

பிக்பாஸ் பிரபலம் சினிமா நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டரின் தங்கை பண மோசடி வழக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் பிரபலம் சினிமா நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டரின் தங்கை பண மோசடி வழக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் பிரபலம் சினிமா நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டரின் தங்கை பண மோசடி வழக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக இருந்து வருபவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பங்கேற்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

ராபர்ட் மாஸ்டரின் மூத்த சகோதரி அல்போன்சா பல படங்களில் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். அவர் மட்டுமல்லாமல் ராபர்ட் மாஸ்டருக்கு மற்றொரு இளைய சகோதரி உள்ளார், அவர் பெயர் ஷோபா வசந்த்.

இந்த ஷோபா வசந்த் சென்னை கேளம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் சென்னை வளசரவாக்கத்தில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தரக்கூடிய நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார்.

இந்நிறுவனம் மூலம் துபாய், கனடா, மலேசியா போன்ற நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி பலரும் அவரது நிறுவனத்திற்கு வந்து வேலை பெற்றுத் தரும்படி விண்ணப்பித்துச் சென்றுள்ளன.

அதன்படி 17 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. வேலை வாங்கி தருவதாகக் கூறி அவர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார் ஷோபா வசந்த்.

ராபர்ட் மாஸ்டர் சகோதரிகள்

அதன் பின்னர் ஷோபா நடத்திய நேர்காணல், அவர் கொடுத்த பணி நியமன ஆணை போலியானது எனத் தெரியவந்துள்ளது. இதனை எடுத்துப் பாதிக்கப்பட்டவர்கள் அவருடைய அலுவலகத்திற்குச் சென்று நேரில் பார்த்த போது இன்னும் சில மாதங்களில் வேலை கிடைத்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

வேலை கிடைக்காத காரணத்தினால் மீண்டும் அலுவலகத்திற்குச் சென்று போய் பார்த்தபோது அலுவலகம் காலியாக இருந்துள்ளது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரு வாட்ஸ் அப் குழு அமைத்து அவர்களது சார்பில் ஷோபாவை தேடி வந்துள்ளனர். அடுத்த கட்டமாகச் சென்னை நொலம்பூர் பகுதியில் ஷோபா புதிய அலுவலகத்தைத் தொடங்கி மீண்டும் அதே வேலையை ஆரம்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

அவர் கேளம்பாக்கம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் காவல்துறையினர் அந்த விடுதியைச் சுற்றி வளைத்து ஷோபாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல ஆண்டுகளாகப் பலரிடம் இவர் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி