தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வன எல்லையில் இருந்து கட்டங்கள் என்ன சொல்கிறார் அமைச்சர்

வன எல்லையில் இருந்து கட்டங்கள் என்ன சொல்கிறார் அமைச்சர்

Mar 12, 2023, 03:48 PM IST

வன எல்லையில் இருந்து கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கும் அளவை, வன எல்லையில் இருந்து 150 மீட்டர் அல்லது 200மீட்டர் என வைக்கலாமா என்று மாவட்ட ஆட்சியர்களிடம் கருத்துரு கேட்டு இருப்பதாக வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி கோவையில் தெரிவித்தார்.
வன எல்லையில் இருந்து கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கும் அளவை, வன எல்லையில் இருந்து 150 மீட்டர் அல்லது 200மீட்டர் என வைக்கலாமா என்று மாவட்ட ஆட்சியர்களிடம் கருத்துரு கேட்டு இருப்பதாக வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி கோவையில் தெரிவித்தார்.

வன எல்லையில் இருந்து கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கும் அளவை, வன எல்லையில் இருந்து 150 மீட்டர் அல்லது 200மீட்டர் என வைக்கலாமா என்று மாவட்ட ஆட்சியர்களிடம் கருத்துரு கேட்டு இருப்பதாக வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி கோவையில் தெரிவித்தார்.

கோவை கொடிசியா அரங்கில் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் கோவை மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கூட்டமைப்பின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநாட்டை கூட்டமைப்பின் தலைவரும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் துவங்கி வைத்தார். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கலந்து கொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

இந்த மாநாட்டில் கட்டுமானம் மற்றும் மனை பிரிவுகளுக்கான அனுமதியினை ஒற்றைசாரள முறையில் 60 நாட்களுக்குள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட உத்தரவு இன்னும் முறையாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அனுமதி பெறுவதிலும் தேவையற்ற காலதாமதம் நீடிக்கிறது, இதனை சரி செய்ய வேண்டும்,

மலை மற்றும் மலை சார்ந்த வனப்பகுதிகளை பயன்படுத்துவதற்கான ஹாக்கா சட்டத்தின் கீழ் வருவதாக குறிப்பிடப்பட்டுவிட்டால் அந்தப் பகுதியில் எந்தக் கட்டிடங்களும் கட்ட அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த நிலை கிராமப்புற பகுதிகளிலும் நீடிக்கிறது, தற்போது ஹாக்கா சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வரைபட அனுமதி பெற்றிட வனத்துறை, மாவட்ட கலெக்டர் மற்றும் பஞ்சாயத்து அளவில் ஒப்புதல் பெற்ற பின்னர் தான் முறையான வரைபட அனுமதிக்கான விண்ணப்பம் செய்திட முடியும். இதனால் தேவையற்ற காலதாமதமும் கூடுதல் பணச் செலவும் ஏற்படுகிறது. இதில் ஒரு தெளிவற்ற நிலை உள்ளது. எனவே மலை மற்றும் குன்றுகளை அடையாளப்படுத்தி அதிலிருந்து குறைந்தபட்ச தூரத்தை கட்டிடம் கட்டுவதற்கு தடை பகுதியாக அறிவித்தது பிற பகுதிகளில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் முத்துசாமி, வீட்டுவசதி வாரியத்தின் 60 குடியிருப்புகள் சுமார் 10 ஆயிரம் வீடுகள் பழுதடைந்துள்ளது. அவற்றை இடித்து புதிதாக கட்ட உள்ளோம். அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும் வீட்டுவசதி வாரிய சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 12 ஆயிரம் வீடுகள் பழுதடைந்து இருக்கின்றது, நேரடியாக இதனுடன் தொடர்பு இல்லை என்றாலும் துறை சார்பில் உதவ முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். எனவே 12 ஆயிரம் வீடுகளை கட்டுவது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

மலைதள பாதுகாப்பு சட்டம் ஹாக்காவின்படி, வன எல்லையில் இருந்து 7 கி.மீ அல்லது 8 கி.மீ கட்டிடங்கள் இருக்க கூடாது என இருக்கின்றது ,இது நியாயமானது அல்ல என பார்க்கின்றோம். வன எல்லையில் இருந்து 150 மீட்டர் அல்லது 200மீட்டர் என வைக்கலாமா என ஆட்சியரிடம் கருத்துரு கேட்டு இருக்கின்றோம் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஹாக்கா விதிமுறை

தாறுமாறாக இல்லாமல் வரையறை படுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது. மேலும் , லே அவுட் விதிமுறைபடி இல்லை என்றாலோ, கட்டிட்டம் விதிமுறை படி இல்லை என்றாலோ, அதற்கு பொறியாளர் பொறுப்பு என தெரிவித்த அவர், பசுமை கட்டிடம் என்பதை ஊக்கப்படுத்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அனுமதி இல்லாத லே அவுட் என்பதை இனி அனுமதிக்க முடியாது,

அணுகுசாலை குறிப்பிட்ட அளவு கட்டாயம் இருக்க வேண்டும், எந்த தவறும் இல்லாமல் லே அவுட் போட வேண்டும், விதிமீறிய கட்டிட்டங்கள் இருக்க கூடாது என தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, நிறைய கட்டிடங்கள் உரிய அனுமதி இல்லாமல் இருக்கின்றது, இனி வரும் கட்டிடங்கள் சரியாக இருக்கும் வகையில் இருக்க வேண்டும், நீங்கள் சரியாக இருந்தால் யாரை பற்றியும் கவலை பட தேவையில்லை எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி