தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அதிமுக பிரமுகர் கொலை - சிறுவன் உட்பட 5 பேர் கைது.. 5 பட்டா கத்திகள் பறிமுதல்!

அதிமுக பிரமுகர் கொலை - சிறுவன் உட்பட 5 பேர் கைது.. 5 பட்டா கத்திகள் பறிமுதல்!

Divya Sekar HT Tamil

Mar 28, 2023, 08:52 AM IST

Chennai Murder : பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Chennai Murder : பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai Murder : பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை : பெரம்பூர் கக்கன்ஜி காலனி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன்(48). இவர் அதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு இளங்கோவன் கட்சிப் பணிகள் முடிந்து வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இளங்கோவன் உயிரிழந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பியம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளங்கோவன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த , சஞ்சய் (19), கணேசன் (23), வெங்கடேசன் (30), அருண்குமார் (28), சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். 

அவர்களிடமிருந்து ஒரு ஆட்டோ, 5 பட்டாக்கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி