தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aiadmk Vs Dmk: ”உடன் பிறப்புகளை ’உச்சாபிறப்புகள்’ என எழுதுகிறார்கள்” அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

AIADMK Vs DMK: ”உடன் பிறப்புகளை ’உச்சாபிறப்புகள்’ என எழுதுகிறார்கள்” அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

Kathiravan V HT Tamil

Jun 21, 2023, 02:03 PM IST

திரைப்படங்களில் வருவது போல திமுகவுக்கு இந்த மாதம் சிறைக்குப் போகும் மாதமாக இருக்கும் - டி.ஜெயக்குமார்
திரைப்படங்களில் வருவது போல திமுகவுக்கு இந்த மாதம் சிறைக்குப் போகும் மாதமாக இருக்கும் - டி.ஜெயக்குமார்

திரைப்படங்களில் வருவது போல திமுகவுக்கு இந்த மாதம் சிறைக்குப் போகும் மாதமாக இருக்கும் - டி.ஜெயக்குமார்

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு கிளைமேட்டும் நன்றாக இருக்கிறது. அதேபோல அரசியல் கிளைமேட்டும் மிகவும் நன்றாக உள்ளது. ஆளுநர் இன்னும் சில நாட்களில் டெல்லி செல்வதாக தகவல் உள்ளது. விடியா அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரும்.

தமிழகத்திற்கே அன்றைக்குத்தான் தீபாவளி. எப்படி நரகாசூரன் ஒழிந்து சந்தோசப்பட்டார்களோ அதேபோல இந்த விடியாத அரசு, ஸ்டாலின் அரசு ஒழிந்தால் அன்றைக்குத்தான் தமிழகத்திற்கு பெரிய தீபாவளி.

38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்று வடையும், போண்டாவையும், சுண்டலையும் சாப்பிட்டு வருகிறார்களே தவிர எந்த பலனும் இல்லை.

இந்த இரண்டு வருடத்தில் தமிழகம் என்ன பலனைக் கண்டது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா, இல்லை. பொருளாதார வல்லுநர் குழு போட்டு இரண்டு வருடம் ஆகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும், பாலும் ஓடும் என்றார்கள். ஆனால் சாக்கடை தண்ணீர்தான் ஓடுகிறது.

ஒரு நாள் மழையில் கிட்டதட்ட 160 இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பொய் சொல்லிவிட்டு எங்கும் தண்ணீர் நிற்கவில்லை என்கிறார்கள்.

இன்றைக்கு செந்தில் பாலாஜியை எடுத்து கொள்ளுங்கள். திமுக அமைச்சர்களை பொறுத்தவரை மக்களை பற்றி சிந்திப்பது கிடையாது. ரூம் போட்டு எவ்வளவு கொள்ளை அடிக்கலாம், எதில் ஊழல் செய்யலாம், எப்படி எல்லாம் சுரண்டலாம் இதுபோன்ற சிந்தனைதான் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது.

30 ஆயிரம் கோடி என்று பிடிஆர் தெரிவித்தார். இதற்கு முதலமைச்சர் அது கட் செய்து ஒட்டப்பட்டது என்று தெரிவிக்கிறார். வெட்டி ஒட்டி செய்துள்ளார்கள் என்றால் அவருடைய குரலாகத்தானே எடுத்துக்கொள்ள முடியும். அந்த 30 ஆயிரம் கோடி ஊழலை இன்றைக்கு மத்திய அரசு தோண்ட ஆரம்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி வாயை திறந்ததால் திமுகவினர் 90 சதவீதம் பேர் உள்ளே போவார்கள் என ஸ்டாலினுக்கு பயம் உள்ளது. திரைப்படங்களில் வருவது போல திமுகவுக்கு இந்த மாதம் சிறைக்குப் போகும் மாதமாக இருக்கும். அடுத்து பொன்முடி போகப்போகிறார். அடுத்து அடுத்து கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் போக போகிறார். செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் அனைவரும் உள்ளே போகக்கூடிய நிலைமை வரும்.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை இரண்டு மாதத்தில் முடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. இல்லை என்றால் நாங்களே ஒரு குழுவைப் போட்டு விசாரிப்போம் என்றார்கள். அந்த அடிப்படையில் இன்றைக்கு நடவடிக்கை உள்ளது. கைது ஏன் இந்த ஆர்ப்பாட்டம். பத்திரிக்கையில் முன்பு கருணாநிதி உடன்பிறப்பே என்று எழுதுவார். தற்போது பத்திரிக்கையில் ’உச்சா பிறப்பே’ என்று எழுதுகிறார்கள். அந்த அளவுக்கு இன்றைக்குக் கைது பயப்படுகிறார்கள்.

செந்தில் பாலாஜியை பொறுத்தவரையில் பல விஷயங்கள் அவருக்குத் தெரியும் எங்குப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று அவருக்குத் தெரியும். அமலாக்கத்துறை இதனை விடப்போவதில்லை. நான் குறிப்பிட்டது போல ஊழலுக்காகவே வீட்டிற்குப் போகும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும்.

ஜல்லிக்கட்டு போட்டியில் கமெண்டரி சொல்வார்கள்.மோதி பார், பிடி, ஓடு என்று சொல்வார்கள். அதுபோலத்தான் இன்றைக்கு ஸ்டாலின் ஜல்லிக்கட்டு கமெண்டரிபோல ஆகிவிட்டார். அந்த வீடியோ வெளியீடு என்பது பயத்தின் உச்சமாக உள்ளது.

அவர் எந்த அளவுக்குப் பயத்தில் உள்ளார் என்பதற்கு அந்த வீடியோவை சாட்சியாக உள்ளது. இவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கம்பி எண்ணுகின்ற நிலைமை ஏற்படும்.

ஊழல் செய்யும் புலிகள் எல்லாம் கோட்டையை விட்டு கம்பி எண்ணும் என்று தலைவர் தெரிவித்தார். அந்த கம்பி எண்ணுகின்ற நாள் விரைவில் திமுகவுக்கு வந்துவிடும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி