தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk: ’அவிழ்த்துவிட்ட மாடுகள் போல் மேய்கிறார்கள்’ திமுகவினர் மீது ஜெயக்குமார் காட்டம்!

ADMK: ’அவிழ்த்துவிட்ட மாடுகள் போல் மேய்கிறார்கள்’ திமுகவினர் மீது ஜெயக்குமார் காட்டம்!

Kathiravan V HT Tamil

Aug 30, 2023, 05:16 PM IST

”எங்கள் தலைவரின் படத்தை மறைத்தால் அது சட்டவிரோதம். அழிக்கப்பட்ட படத்தை மீண்டும் வரைய வேண்டும்”
”எங்கள் தலைவரின் படத்தை மறைத்தால் அது சட்டவிரோதம். அழிக்கப்பட்ட படத்தை மீண்டும் வரைய வேண்டும்”

”எங்கள் தலைவரின் படத்தை மறைத்தால் அது சட்டவிரோதம். அழிக்கப்பட்ட படத்தை மீண்டும் வரைய வேண்டும்”

எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை மறைத்து முதல்வரின் காலை உணவுத்திட்டம் குறித்த பதாகைகள் முன்னிலை படுத்தப்படுவதாக கூறி சென்னை மாநகாட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசு காலை சிற்றுண்டி திடத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அதிமுக ஆட்சியில் தான். சென்னையில் 358 அங்கன்வாடி மையங்கள் உள்ளளில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை மறைத்து காலை சிற்றுண்டி திட்டம் என எழுதுகிறார்கள்.

உங்கள் படத்தை வைத்துக்கொள்வதில் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் ஏன் எங்கள் தலைவரின் படத்தை மறைக்கிறீர்கள்? அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு காலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது நியாயமில்லை.

எங்கள் தலைவரின் படத்தை மறைத்தால் அது சட்டவிரோதம். அழிக்கப்பட்ட படத்தை மீண்டும் வரைய வேண்டும். இல்லையெனில் நாங்கள் எழுதி வைக்க வேண்டிய நிலை வரும். அந்த நிலைக்கு எங்களை ஆளாக்காதீர்கள். இந்த அரசு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, காவல்துறை என யாருக்கும் மதிப்பு அளிப்பதில்லை. அதிமுக ஆட்சியில் மிடுக்காக இருந்த காவல்துறை இன்று வெட்கி, தலைக்குணியும் நிலையில் உள்ளது.

கட்சி ஆட்கள் தவறு செய்தால் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல், ஊக்கப்படுத்துகிறார். கட்சி ஆட்களை அடக்கி வைக்காததால், அவிழ்த்துவிட்ட மாடுகளை போல் மெய்ந்து கொண்டு இருக்கிறார்கள். 

நாங்கள் தான் கொடநாடு குற்றவாளிகளை பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தினோம். திமுகவிற்கும், கோடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். எதற்காக குற்றவாளிகளுக்கு திமுக வழக்கறிஞர்கள் ஜாமீன் எடுக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை கூறுகிறோம் என கூறுகிறார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி