தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  12th Mark Statement : 12ம் வகுப்பு முடித்த மாணவர்களே முக்கிய அறிவிப்பு! இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்!

12th Mark Statement : 12ம் வகுப்பு முடித்த மாணவர்களே முக்கிய அறிவிப்பு! இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்!

Priyadarshini R HT Tamil

Jul 31, 2023, 05:57 AM IST

கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று வழங்கப்படும் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் 2022-23ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை பல லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர். அவர்களுக்கான முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. தொடர்ந்து தேர்வெழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 12ம் தேதி முதல் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை கொண்டு மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

Weather Update: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்! வெளுக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்நிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும் உடனடி சிறப்பு துணைத்தேர்வுகளை எழுதினார்கள். அவர்களுக்கான முவுகளும் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று வழங்கப்படும் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவு உட்பட அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி