தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  10th Supplement Exam : இன்று : 10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு!

10th Supplement Exam : இன்று : 10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு!

Priyadarshini R HT Tamil

Jul 26, 2023, 09:52 AM IST

10th Supplement Exam : தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் ஜீலை 26ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
10th Supplement Exam : தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் ஜீலை 26ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

10th Supplement Exam : தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் ஜீலை 26ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது இந்நிலையில் இன்று வெளியாக உள்ள 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டது. தங்கள் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar: ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

இதையடுத்து துணைத் தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு வரும் ஆகஸ்ட் 1, 2 ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் நகல் பெற மற்றும் மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பி.டெக் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இந்த தரவரிசைப் பட்டியல், இன்று காலை 10 மணிக்கு  www.adm.tanuvas.ac.in , www.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் வெளியாகவுள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூன் 12ம் தேதி முதல் 30ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்த நாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படி புக்கு (பிவிஎஸ்சி - ஏஹெச்) 660 இடங்கள் உள்ளன. 

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி