தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

Divya Sekar HT Tamil

Aug 23, 2022, 09:14 AM IST

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் கலந்து கொள்ளாதவர்களுக்கு உடனடியாக ஆகஸ்ட் மாதம் துணை தேர்வு நடத்தப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

இந்நிலையில்,10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் மதிப்பெண்ணில் சந்தேகம் இருப்பின் மறுகூட்டலுக்கு வரும் ஆக.,25, 26 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் தேர்வுத்துறை என தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். பாடம் ஒன்றிற்கு ரூ.205 செலுத்த வேண்டும். 

அத்துடன் 10ஆம் வகுப்பு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி