தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Watch: ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசிய பாகிஸ்தான் வீரர்!

Watch: ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசிய பாகிஸ்தான் வீரர்!

Manigandan K T HT Tamil

Feb 06, 2023, 09:34 AM IST

Pakistan Super League: நேற்றைய ஆட்டத்தில் அவர் கடைசி 20ஆவது ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி அசத்தினார்.
Pakistan Super League: நேற்றைய ஆட்டத்தில் அவர் கடைசி 20ஆவது ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி அசத்தினார்.

Pakistan Super League: நேற்றைய ஆட்டத்தில் அவர் கடைசி 20ஆவது ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி அசத்தினார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்நாட்டில் காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

நேற்று குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஜல்மி இடையிலான ஆட்டம் நடந்தது.

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் பாகிஸ்தான் அதிரடி வீரர் இஃப்திகர் அகமது இடம்பெற்றுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் அவர் கடைசி 20ஆவது ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி அசத்தினார். மேலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 50 பந்துகளில் 94 ரன்களையும் அவர் பதிவு செய்தார்.

அந்த அணி மொத்தம் 184 ரன்களை குவித்தது. அவர் 6 பந்துகளில் சிக்ஸர் விளாசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வஹாப் வீசிய 6 பந்துகளையும் இப்திகர் அகமது சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்த ஆட்டத்தில் பாபர் அஸாம் தலைமையிலான பெஷாவர் அணி 181 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. பாபர் 32 ரன்களை எடுத்தார்.

முன்னதாக, 2007 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் ஆனார்.

அதே ஆண்டில், இந்தியாவின் யுவராஜ் சிங், டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த முதல் வீரரானார்.

இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளை சிக்ஸருக்கு விரட்டி அசத்தினார் யுவராஜ் சிங்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 1984-85 காலகட்டத்தில் பரோடா அணிக்கு எதிராக ரவி சாஸ்திரி ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் ஆனார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி