தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ranji Trophy: சவுராஷ்டிரா மீண்டும் சாம்பியன்.. பவுலிங்கில் மிரட்டிய உனத்கட்!

Ranji Trophy: சவுராஷ்டிரா மீண்டும் சாம்பியன்.. பவுலிங்கில் மிரட்டிய உனத்கட்!

Manigandan K T HT Tamil

Feb 19, 2023, 12:40 PM IST

Bengal vs Saurashtra, Final: ஆட்டநாயகனாக ஜெய்தேவ் உனத்கட் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக அர்பித் வசவடா அறிவிக்கப்பட்டார். (PTI)
Bengal vs Saurashtra, Final: ஆட்டநாயகனாக ஜெய்தேவ் உனத்கட் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக அர்பித் வசவடா அறிவிக்கப்பட்டார்.

Bengal vs Saurashtra, Final: ஆட்டநாயகனாக ஜெய்தேவ் உனத்கட் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக அர்பித் வசவடா அறிவிக்கப்பட்டார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலில் பெங்கால் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சவுராஷ்டிரா.

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

கடந்த 16ஆம் தேதி தொடங்கிய பைனல் போட்டி இன்று நிறைவு பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற சவுராஷ்டிர அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 174 ரன்கள் எடுத்தது.

ஷாபாஸ் அகமது, விக்கெட் கீப்பர் அபிஷேர் போரெல் ஆகியோர் அரை சதம் விளாசினர். சவுராஷ்டிரா சார்பில் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட், சேத்தன் சகாரியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து, சவுராஷ்டிரா அணி 110 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 404 ரன்களை குவித்தது.

விக்கெட் கீப்பர் ஹர்விக் தேசாய் 50 ரன்களையும், ஜாக்சன் 59 ரன்களையும் எடுத்தனர். வசவடா 81 ரன்கள் குவித்தார்.

230 ரன்கள் பின்னிலையுடன் பெங்கால் அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 70.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை அந்த அணி எடுத்தது. கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிர அணி 2.4 ஓவர்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக ஆஸி.,க்கு எதிரான டெஸ்டில் இடம்பெற்றிருந்த ஜெய்தேவ் உனத்கட் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் கிரிக்கெட்டில் முக்கியமான தொடரான ரஞ்சி கோப்பையில் சவுராஷ்டிர அணி ஏற்கனவே 2019-20 சீசனில் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றிருக்கிறது. தற்போது சவுராஷ்டிரா 2 வது முறையாக சாம்பியன் வென்று சாதனை படைத்துள்ளது.

வெற்றி மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த சவுராஷ்டிரா வீரர்கள்

ஆட்டநாயகனாக ஜெய்தேவ் உனத்கட் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக அர்பித் வசவடா அறிவிக்கப்பட்டார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி