தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Holiday Trip For April: லீவு வந்தாச்சு! ஏப்ரல், மே யிலே பசுமையான ட்ரிப் போலாமா? இதோ உங்களுக்கான Bucket List

Holiday Trip for April: லீவு வந்தாச்சு! ஏப்ரல், மே யிலே பசுமையான ட்ரிப் போலாமா? இதோ உங்களுக்கான Bucket List

Mar 30, 2024, 08:25 PM IST

ஜெய்ப்பூரில் இருக்கும் கங்குவார் திருவிழா, இயற்கை எழில் கொஞ்சும் டார்ஜிலிங் என ஏபரலில் கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் என்னவெல்லாம் என்பதை பார்க்கலாம்

  • ஜெய்ப்பூரில் இருக்கும் கங்குவார் திருவிழா, இயற்கை எழில் கொஞ்சும் டார்ஜிலிங் என ஏபரலில் கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் என்னவெல்லாம் என்பதை பார்க்கலாம்
வசந்த காலத்தின் தொடக்கமாக ஏப்ரல் மாதம் இருந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் இயற்கை எழில் கொஞ்சும் விதமாக இருப்பதோடு, பல்வேறு பாரம்பரிய திருவிழாக்கள் நிகழும் நேரமாக இருந்து வருகிறது. தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் குடும்பத்தினருடன் சென்று நேரத்தை செலவழிக்க உகந்த காலமாகவும் இருந்து வருகிறது
(1 / 7)
வசந்த காலத்தின் தொடக்கமாக ஏப்ரல் மாதம் இருந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் இயற்கை எழில் கொஞ்சும் விதமாக இருப்பதோடு, பல்வேறு பாரம்பரிய திருவிழாக்கள் நிகழும் நேரமாக இருந்து வருகிறது. தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் குடும்பத்தினருடன் சென்று நேரத்தை செலவழிக்க உகந்த காலமாகவும் இருந்து வருகிறது(Unsplash)
வாரணாசி, உத்தரபிரதேசம்: வருடம் முழுவதும் செல்லக்கூடிய இடமாக வாரணாசி இருந்தாலும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் ராம் நவமி துடிப்பு மிக்க விழாவாக திகழ்கிறது. பக்தி பாடல்கள், ஆன்மிக சடங்குகள், கலச்சார நிகழ்வுகள் என பாரம்பரியத்தை நோக்கி அழைத்து செல்லும் விதமாக நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்
(2 / 7)
வாரணாசி, உத்தரபிரதேசம்: வருடம் முழுவதும் செல்லக்கூடிய இடமாக வாரணாசி இருந்தாலும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் ராம் நவமி துடிப்பு மிக்க விழாவாக திகழ்கிறது. பக்தி பாடல்கள், ஆன்மிக சடங்குகள், கலச்சார நிகழ்வுகள் என பாரம்பரியத்தை நோக்கி அழைத்து செல்லும் விதமாக நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்(Unsplash)
காசிரங்கா பூங்கா, அசாம்: நாட்டின் மிக பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக இருக்கும் காசிரங்கா தேசிய பூங்காவில் பச்சைபசேல் என இருக்கும் பசுமையான சூழலில், வண்ணமயமாக பூக்கும் மலர்கள், பலவகையான தாவரங்களுடன் ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை கண்டுகளிக்கலாம். அதுமட்டுமில்லாமல் பல்வேறு வனவிலங்குகளின் கூட்டத்தையும் பார்த்து ரசிக்கலாம்
(3 / 7)
காசிரங்கா பூங்கா, அசாம்: நாட்டின் மிக பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக இருக்கும் காசிரங்கா தேசிய பூங்காவில் பச்சைபசேல் என இருக்கும் பசுமையான சூழலில், வண்ணமயமாக பூக்கும் மலர்கள், பலவகையான தாவரங்களுடன் ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை கண்டுகளிக்கலாம். அதுமட்டுமில்லாமல் பல்வேறு வனவிலங்குகளின் கூட்டத்தையும் பார்த்து ரசிக்கலாம்(Unsplash)
ரிஷிகேஷ், உத்தரகண்ட்: மற்றொரு ஆன்மிக பயணமாக ரிசிகேஷ் உள்ளது. ஆன்மிகம், மனஅமைதி வேண்டுவோர் இந்த பயணத்தை தேர்வு செய்யலாம். ரம்மியமான காலநிலையுடன் சாமி தரிசனம் புத்துணர்ச்சியை தரும். வெறும் ஆன்மிகம் மட்டும் இல்லாமல் சாகச பிரயர்களுக்கான இடமாகவே ரிஷகேஷ் உள்ளது. இங்கு ரிவர் ராப்டிங் போன்ற சாகச விளையாட்டுகளையும் மேற்கொள்ளலாம். யோகா பயிற்சிகள் செய்து புத்துணர்வு பெறலாம்
(4 / 7)
ரிஷிகேஷ், உத்தரகண்ட்: மற்றொரு ஆன்மிக பயணமாக ரிசிகேஷ் உள்ளது. ஆன்மிகம், மனஅமைதி வேண்டுவோர் இந்த பயணத்தை தேர்வு செய்யலாம். ரம்மியமான காலநிலையுடன் சாமி தரிசனம் புத்துணர்ச்சியை தரும். வெறும் ஆன்மிகம் மட்டும் இல்லாமல் சாகச பிரயர்களுக்கான இடமாகவே ரிஷகேஷ் உள்ளது. இங்கு ரிவர் ராப்டிங் போன்ற சாகச விளையாட்டுகளையும் மேற்கொள்ளலாம். யோகா பயிற்சிகள் செய்து புத்துணர்வு பெறலாம்(Unsplash)
டார்ஜிலிங், மேற்கு வங்காளம்: போர்வை போல் பனி படர்ந்திருக்கும் இமயமலையின் கண்கவர் அழகை ரசிக்கவும், வண்ணமயமாக பூத்துக் குலுங்கும் ரோடோடென்ட்ரான்களைக் காணவும், குளுமையான சூழலில் இருக்கும் மலைப்பகுதிகளில் இளைப்பாரவும் இங்கு செல்லலாம்
(5 / 7)
டார்ஜிலிங், மேற்கு வங்காளம்: போர்வை போல் பனி படர்ந்திருக்கும் இமயமலையின் கண்கவர் அழகை ரசிக்கவும், வண்ணமயமாக பூத்துக் குலுங்கும் ரோடோடென்ட்ரான்களைக் காணவும், குளுமையான சூழலில் இருக்கும் மலைப்பகுதிகளில் இளைப்பாரவும் இங்கு செல்லலாம்(Unsplash)
ஜெய்ப்பூர், ராஜஸ்தான்: பிங்க் நகரம் என்று அழைக்கப்படும் ஜெயப்பூரில் புகழ்பெற்ற கங்குவார் திருவிழா கண்களிக்கலாம். வண்ணங்களின் திருவிழாவாக இருக்கும் இதில் இடம்பெறும் சடங்குகள், கலச்சார நிகழ்வுகள் புதுமையான அனுபவத்தை தரும்
(6 / 7)
ஜெய்ப்பூர், ராஜஸ்தான்: பிங்க் நகரம் என்று அழைக்கப்படும் ஜெயப்பூரில் புகழ்பெற்ற கங்குவார் திருவிழா கண்களிக்கலாம். வண்ணங்களின் திருவிழாவாக இருக்கும் இதில் இடம்பெறும் சடங்குகள், கலச்சார நிகழ்வுகள் புதுமையான அனுபவத்தை தரும்(Unsplash)
நீலகிரி, தமிழ்நாடு: கோடை வெப்பத்தில் இருந்து விடுபட்டு இளைப்பாறும் இடமாக நீலகிரி உள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என இருக்கும் தேயிலை தோட்டங்கள், மன அமைதியை தரும் ஏரிகளில் படகு சவாரி மேற்கொள்ளலாம். அத்துடன் ட்ரெங்கில் போன்றவற்றிலும் ஈடுபடலாம். கோடையில் நடைபெறும் மலர் கண்காட்சி, தேயிலை திருவிழாவிலும் பங்கேற்கலாம்
(7 / 7)
நீலகிரி, தமிழ்நாடு: கோடை வெப்பத்தில் இருந்து விடுபட்டு இளைப்பாறும் இடமாக நீலகிரி உள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என இருக்கும் தேயிலை தோட்டங்கள், மன அமைதியை தரும் ஏரிகளில் படகு சவாரி மேற்கொள்ளலாம். அத்துடன் ட்ரெங்கில் போன்றவற்றிலும் ஈடுபடலாம். கோடையில் நடைபெறும் மலர் கண்காட்சி, தேயிலை திருவிழாவிலும் பங்கேற்கலாம்(Unsplash)
:

    பகிர்வு கட்டுரை