தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Law And Justice : சட்டங்களும், நீதியும் சாமானியர்களுக்கு சாதமாக இல்லை - முன்னாள் நீதிபதி வேதனை!

Law and Justice : சட்டங்களும், நீதியும் சாமானியர்களுக்கு சாதமாக இல்லை - முன்னாள் நீதிபதி வேதனை!

May 07, 2024, 01:05 PM IST

Law and Justice : சட்டங்களும், நீதியும் சாமானியர்களுக்கு சாதமாக இல்லை என ஒடிஸ்ஸா முன்னாள் நீதிபதி முரளிதர் வேதனை தெரிவித்துள்ளார். 

  • Law and Justice : சட்டங்களும், நீதியும் சாமானியர்களுக்கு சாதமாக இல்லை என ஒடிஸ்ஸா முன்னாள் நீதிபதி முரளிதர் வேதனை தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒடிஸ்ஸா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முரளிதரின் உரை இந்த கால கட்டத்தில் நம் நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலை மற்றும் நீதிமன்றங்களில் செயல்பாடுகள் குறித்து சிந்திக்க வைப்பதாக இருந்தது. அவர் பேசியதில் இருந்து சில முக்கியமானவற்றை இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். 
(1 / 11)

நாம் தற்போது ஒரு இக்கட்டான காலகட்டத்தில்,நேர்மையற்று,/அறமின்றி குறிப்பிட்டசில மக்களை சாதி/மதம்/இன அடிப்படையில், சட்டவிதிகளை மதிக்காமல் தவறாக காழ்ப்புணர்ச்சியுடன் நடத்தி வருகிறோம்.
(2 / 11)

ஏழைகள் பரம ஏழைகளாகவும்,பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறி,சமத்துவத்தன்மை பெரிதும் குறைந்து வரும் போக்கை இந்தியா/தமிழகத்தில் காண முடிகிறது.
(3 / 11)

சர்வாதிகார ஆட்சியில், சாதாரண மக்களின் உரிமைகளை காக்க, அரசிற்கு எதிரான கூட்டெதிர்ப்பு, அரசியல் சாசன சட்ட விதிகளை துளியும் மதிக்காமல், சர்வாதிகாரப் போக்குடன், நசுக்கப்படும் சூழல் (தலைநகர் டெல்லியில் உழவர்களின் போராட்டம்) நிலவுகிறது.
(4 / 11)

United Nations Development Programme. நாடுகளின் மனித வளர்ச்சி அறிக்கையில், ‘ஜனநாயகத்தின் புதிர்’ - Democratic Paradox - என்ற தலைப்பில், எவ்வாறு கொடுங்கோல் ஆட்சி செய்பவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகப் போர்வையில், ஜனநாயகத்தையும், சட்டங்களையும் துளியும் மதிக்காமல், கேலிகூத்தாக்கும் போக்கு, அதிகமாகி மக்களை தவறாக ஆண்டுவருவது நிகழ்ந்து வருகிறது.
(5 / 11)

சட்டங்கள் மிகப்பெரும் ஆயுதங்களாக மாறி, மக்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மதிக்காத/பாதுகாக்காத போக்கு நிலவிவருகிறது. அதிகாரம் படைத்த, ஆளும் வர்க்கத்தினரின் கையில் சிக்கி அது அவர்களுக்கு மட்டுமே உதவி வருகிறது.
(6 / 11)

உலகம் முழுக்க உரிமைகளுக்காக போராடும் மக்களை அடக்கி ஆளவும். அதிகாரத்தையும், நிர்வாகத்தையும் கையில் எடுத்து, சட்டங்களை தவறாக (Abuse) பயன்படுத்தி, அரசியல் எதிரிகளையும், அதிகாரத்திற்கு எதிராக போராடும் மக்களின் குரல்களை ஒடுக்கவும் பயன்பட்டு வருகிறது.
(7 / 11)

TADA, POTA, UAPA போன்ற சட்டங்கள், தவறாக பயன்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர் பிணையில் வெளிவருவதே கடினம் என்பது மட்டுமல்லாமல், "குற்றமற்றவர்" என்பதை குற்றம் சுமத்தப்பட்டவர்களே நிரூபிக்க வேண்டும் என இருப்பது எப்படி சரியாகும்?
(8 / 11)

நீதியை நிலைநாட்டுவதில், ஒருதலைபட்சமாக அரசு செயல்படுவது (Bias)(எதிர்கட்சி உறுப்பினர்களை குறிவைத்து தாக்குவதும், ஆளுங்ககட்சியில் அதே குற்றங்கள் நிகழ்ந்தால் கண்டுகொள்ளாமலும் இருப்பது) அதிகரிக்கும் போக்கு நிலவிவருகிறது.
(9 / 11)

அமெரிக்க சிறைகளில் "கருப்பர்கள்" அதிகம் இருப்பதுபோல், இந்திய சிறைகளில், விசாரணைக் கைதிகளில் 21.9 சதவீதம் பேர் முஸ்லீம்கள் (இந்திய மக்கள்தொகையில் முஸ்லீம்களின் பங்கு 14 சதவீதம்  மட்டுமே) தாழ்த்தப்பட்ட மக்களில் 21.6 சதவீதம் பேரும், பழங்குடியின மக்களில் 12.4 சதவீதம் பேரும் விசாரணைக் கைதிகளாக இந்திய சிறையில் அதிக அளவு உள்ளனர். இவை முன்னாள் நீதிபதி முரளிதரின் கருத்துக்கள். 
(10 / 11)

இவரின் கருத்துக்களை கேட்கும்போது, தமிழகத்திலும் தனியார் பள்ளி மாடியில் இருந்து தவறிவிழுந்து இறந்த மாணவி வழக்கு, திருவண்ணாமலை மேல்மா விவசாயிகள் போராட்ட வழக்கு, பரந்தூள் ஈரநிலங்கள் விவகாரம் என பல்வேறு பிரச்னைகளிலும் நீதித்துறையில் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்ற கேள்விகள் உள்ளன. எனவே நீதித்துறை எப்போதும் தனது நிலையை பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதமாகவே வைத்திருப்பதுதான் ஆரோக்கியமான சமூகத்துக்கு நல்லது. நன்றி - மருத்துவர் புகழேந்தி.  
(11 / 11)

:

    பகிர்வு கட்டுரை