தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime : மெட்ரோவில் இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞர் கைது!

Crime : மெட்ரோவில் இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞர் கைது!

Divya Sekar HT Tamil

Dec 10, 2023, 11:51 AM IST

பெங்களூருவில் மெட்ரோ ரயிலில் பயணித்த 22 வயது இளம் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் மெட்ரோ ரயிலில் பயணித்த 22 வயது இளம் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவில் மெட்ரோ ரயிலில் பயணித்த 22 வயது இளம் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சமீபகாலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் பல பிரச்சனைகளை கையாளுகின்றன. இதில் முக்கியமான ஒரு குற்றச்சாட்டு பாலியல் தொல்லை. பெண்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையங்கள்,ரயில்நிலையங்கள் போன்ற பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் வழக்கமான ஒன்றாக உள்ளது. தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் தான் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நம்ம மெட்ரோ என்னும் பெயரில் மெட்ரோ சேவை அளிக்கப்பட்டு வருகிறது. பணிக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும் தினமும் இந்த மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் பெங்களூருவில் மெட்ரோ ரயிலில் பயணித்த 22 வயது இளம்பெண், பயணத்தின் போது பாலியல் தொந்தரவினை சந்தித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9.40 மணியளவில் மெஜஸ்டிக் நோக்கிச் சென்ற மெட்ரோ ரயிலில் அதிகளவு கூட்டம் இருந்துள்ளது. அப்போது அந்த ரயிலில் பயணித்த இளம்பெண்ணுக்கு மர்மநபர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அந்த மர்மநபர் ராஜாஜி நகர் மெட்ரோ நிலையம் வந்ததும் தப்பிக்க முயன்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த சக பயணிகள் அந்த மர்மநபரை பிடித்துப் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அந்த மர்மநபர் உப்பாரப்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அந்த மர்மநபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் இதுபோல பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்த 20 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி