தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala Case: இரண்டரை வயதுக் குழந்தை - இரட்டை ஆயுள் தண்டனை!

Kerala Case: இரண்டரை வயதுக் குழந்தை - இரட்டை ஆயுள் தண்டனை!

Feb 28, 2023, 12:33 PM IST

கேரளாவில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் சுனில் என்ற 47 வயதான தொழிலாளர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அங்கு இரண்டரை வயதில் ஒரு சிறு பெண் குழந்தை உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

சமீபகாலமாகக் குழந்தையின் உடலில் சில காயங்கள் காணப்பட்டுள்ளன. இது குறித்துப் பதறிப்போன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்த பெண் குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் கண்ணூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இந்த சிறிய குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பக்கத்து வீட்டில் வசித்து வந்து தொழிலாளி சுனில் எனத் தெரிய வந்துள்ளது.

பின்னர் காவல் துறையினர் சுழலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு தளிபரம்பு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பு அப்பகுதியில் ஏற்படுத்தியது.

தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி," இரண்டரை வயதுக் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுனிலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஒருவேளை அபராதம் கட்டாவிட்டால் மேலும் ஆறு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்" எனத் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி