தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Student Suicide: தூக்கில் தொங்கிய மாணவர் - வார்டனுக்கு ஹார்ட் அட்டாக்!

Student Suicide: தூக்கில் தொங்கிய மாணவர் - வார்டனுக்கு ஹார்ட் அட்டாக்!

Feb 06, 2023, 12:37 PM IST

Warden Passed Away: தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்து கொண்ட மாணவரைக் கண்ட விடுதி வார்டன் மாரடைப்பால் உயிர் இழந்தார்.
Warden Passed Away: தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்து கொண்ட மாணவரைக் கண்ட விடுதி வார்டன் மாரடைப்பால் உயிர் இழந்தார்.

Warden Passed Away: தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்து கொண்ட மாணவரைக் கண்ட விடுதி வார்டன் மாரடைப்பால் உயிர் இழந்தார்.

திருப்பதி கூடூரு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் தாரனேஸ்வரர் இந்த மாணவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் விடுதி அருகில் தனியாக இருந்த மாணவர் மின்விசிறியில் தூக்குப் போட்டு உயிரிழந்த நிலையில் தொங்கியுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Vladimir Putin: ரஷ்யாவின் பிரதமராக மைக்கேல் மிஷுஸ்டினை மீண்டும் விளாடிமிர் புதின் நியமித்தார்

Swift 2024: மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல் இந்தியாவில்அறிமுகம்: விலை எவ்வளவு, பிற அம்சங்களை அறிவோம் வாங்க

Sandeshkhali case: சந்தேஷ்காலி வழக்கில் திடீர் திருப்பம்.. பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்ற பெண்

Bengaluru:பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை: இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அதன்பின்னர் விடுதிக்கு வந்த மாணவர்கள் அதனைப் பார்த்து தூக்கில் பிணமாகத் தொங்கும் மாணவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விடுதி வார்டன் சீனிவாசலுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு வார்டன் சீனிவாசலு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தூக்கில் தொங்கிய மாணவனின் உடலைப் பார்த்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.

உடனே மாணவர்கள் அருகிலிருந்த கூடூரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சீனிவாசலு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து நிலையை நேரடியாகப் பார்த்த வார்டன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி