தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Tiguan Exclusive Edition: நியூ எடிஷனாக களமிறங்கிய Tiguan Suv!

Tiguan Exclusive Edition: நியூ எடிஷனாக களமிறங்கிய Tiguan SUV!

Dec 08, 2022, 04:00 PM IST

வோல்க்ஸ்வாகன் எக்ஸ்க்ளூஸிவ் எடிஷனாக புதிய Tiguan SUV காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
வோல்க்ஸ்வாகன் எக்ஸ்க்ளூஸிவ் எடிஷனாக புதிய Tiguan SUV காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

வோல்க்ஸ்வாகன் எக்ஸ்க்ளூஸிவ் எடிஷனாக புதிய Tiguan SUV காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

வோல்க்ஸ்வாகன் நிறுவனம் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்ததாகும். இந்நிறுவனம் தற்போது எக்ஸ்க்ளூஸிவ் எடிஷனாக புதிய Tiguan SUV கார் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையானது 33.50 லட்சம் ஆகும். இந்த காரில் காஸ்மெட்டிக் அப்டேட் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Fact Check : YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

Mamata Banerjee: ’மம்தா பானர்ஜி ஜெயித்தால் பாஜகவை ஆதரிப்பார்!’ ஆதிர் ரஞ்சன் பேச்சால் இந்தியா கூட்டணியில் சர்ச்சை!

Fact Check: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் வீடியோ? – உண்மைத்தன்மை என்ன?

Fact Check: என்னது.. இதுதான் பிரதமர் மோடியின் திருமண போட்டோவா.. வைரலாகி வரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

குறிப்பாக இந்த கார் MQB பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக டெக்னாலஜி, பாதுகாப்பு, ஸ்டைல் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார், Pure white, Oryx white ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

இதன் அம்சங்கள்

  • இந்த காரில் 18 இன்ச் Sebring அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர் வசதி, Matrix LED ஹெட் லேம்ப், டைல் லேம்ப் போன்ற வசதிகள் கொடுப்பட்டுள்ளது.
  • இதில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது பவர் 188 BHP மற்றும் 320 NM டார்க்விசைக் கொண்டதாகும்.
  • இதில் ஆம்பிஎண்ட் லைட்டிங், பவர் டைல் கேட், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் ஸ்க்ரீன், கனெக்டெட் கார் டெக்னாலஜி, 10 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், கெஸ்ச்சர் கண்ட்ரோல் , 3 சோன் கிளைமேட் கண்ட்ரோல், வியன்னா லெதர் அபோல்ஸ்ட்ரி போன்ற அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், 7 ஸ்பீட் DSG கியர் பாக்ஸ், 4 டிரைவ் மோட் வசதி போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.
  • இதில் பாதுகாப்புக்காக எலக்ட்ரானிக் டிபரென்ஷியல் பாக்ஸ், ABS, ஹில் அஸ்சிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டாபிளிட்டி கண்ட்ரோல், 6 ஏர் பேக் வசதிகள், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி