தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Up Teacher Punishment: ஷாக்..உ.பியில் கொடூரம்.. மாணவனுக்கு ஆசியரின் கொடூர தண்டனை

UP Teacher punishment: ஷாக்..உ.பியில் கொடூரம்.. மாணவனுக்கு ஆசியரின் கொடூர தண்டனை

Divya Sekar HT Tamil

Nov 27, 2022, 09:14 AM IST

கான்பூரில் இரண்டாம் வாய்பாட்டை ஒப்பிக்க தவறிய மாணவனுக்கு ஆசிரியர் ஹேண்ட் டிரில்லிங் மூல்ம தண்டனை வழங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் இரண்டாம் வாய்பாட்டை ஒப்பிக்க தவறிய மாணவனுக்கு ஆசிரியர் ஹேண்ட் டிரில்லிங் மூல்ம தண்டனை வழங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூரில் இரண்டாம் வாய்பாட்டை ஒப்பிக்க தவறிய மாணவனுக்கு ஆசிரியர் ஹேண்ட் டிரில்லிங் மூல்ம தண்டனை வழங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் : கான்பூர் மாவட்டத்தில் உள்ள சிசாமாவ் என்ற இடத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விவான் என்ற மாணவன் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

ட்ரெண்டிங் செய்திகள்

PM Modi Exclusive Interview: இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டங்களை அறிவிக்காதது ஏன்? - பிரதமர் மோடி பரபரப்பு விளக்கம்

Mother's Day: அன்னையின் பாதத்தில் சொர்க்கம்.. இறை நூல்கள் கூறும் தத்துவம்.. அன்னையர் தின வாழ்த்துகள்

Vladimir Putin: ரஷ்யாவின் பிரதமராக மைக்கேல் மிஷுஸ்டினை மீண்டும் விளாடிமிர் புதின் நியமித்தார்

Swift 2024: மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல் இந்தியாவில்அறிமுகம்: விலை எவ்வளவு, பிற அம்சங்களை அறிவோம் வாங்க

இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி 2-ஆம் வாய்பாட்டை மாணவன் விவானை ஆசிரியர் சொல்ல சொல்லியுள்ளார். ஆனால் விவான் மனப்பாடமாக ஒப்பிக்காததால் ஆசிரியர் அனுஜ் பாண்டே ஹேண்ட் டிரில்லிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி மாணவனை காயப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவர் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று பள்ளியின் முன் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடிப்படைக் கல்வி அதிகாரி சுர்ஜித் குமார் சிங், சிறுவனின் பெற்றோரை பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர், ஆசிரியர் அனுஜ் பாண்டேவை பணியில் இருந்து நீக்குவதாக அவர் அறிவித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்ததுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மாணவன் விவான் கூறுகையில், “அனுஜ் சார் என்னை இரண்டாம் வாய்ப்பாட்டை சொல்லச் சொன்னார். நான் சரியாகப் செல்லவில்லை. இதற்காக அவர் எனது இடது கையில் ஹேண்ட் டிரில்லிங் இயந்திரத்தை இயக்கினார். என் நண்பன் கிருஷ்ணா, இயந்திரத்தை நிறுத்துவதற்காக பிளக்கை வெளியே இழுத்தார். ஆனால் அதற்குள் என் கையில் காயம் ஏற்பட்டது,”எனத் தெரிவித்துள்ளான்.

இரண்டாம் வாய்பாட்டை ஒப்பிக்க தவறிய மாணவனுக்கு ஆசிரியர் ஹேண்ட் டிரில்லிங் மூல்ம தண்டனை வழங்கி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி