தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Manipur Crime: நிர்வாண ஊர்வலம்.. அதே நாளில் 2 பெண்கள் கூட்டுப் பாலியலில் உயிரிழப்பு

Manipur Crime: நிர்வாண ஊர்வலம்.. அதே நாளில் 2 பெண்கள் கூட்டுப் பாலியலில் உயிரிழப்பு

Jul 22, 2023, 09:41 AM IST

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாண ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட அதே நாளில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாண ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட அதே நாளில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாண ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட அதே நாளில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உலகத்தையே உலுக்கி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மொய்தி சமூகத்தினர் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர். அதற்குக் குக்கி பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சிக்கல், இரண்டு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று மோதலாக மாறியது. மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. தற்போது இரண்டு மாதங்களாக இந்த கலவரம் நீடித்து வருகிறது.

இந்த கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரம் ஒருபுறம் இருக்க, குக்கி பழங்குடியின பெண்களுக்கு எதிராக பல்வேறு பாலியல் கொடுமைகள் நடந்து வருகின்றன.

கடந்த மே நான்காம் தேதி முதல் பாலியல் வன்கொடுமைகளுக்குப் பெண்கள் ஆளாகி வருகின்றனர். இது தொடர்பான விவரங்கள் தற்போது 75 நாட்களுக்குப் பிறகு தற்போது வெளியாகி உள்ளன.

கொக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மொய்தே இன கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் மணிப்பூரில் மே நான்காம் தேதி இந்த சம்பவம் நடந்த பிறகு மேலும் இரண்டு பெண்கள் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட ஒரே நாளில் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்து இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. தற்போது வரை இந்த வழக்கு குறித்து யாரும் கைது செய்யப்படவில்லை. மணிப்பூர் கலவர சம்பந்தமாக 6000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி