தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Shoot At Bengaluru: பெங்களூரு நகைக்கடையில் அத்துமீறி நுழைந்த இருவர் துப்பாக்கிச்சூடு; இருவர் காயம்!

Shoot At Bengaluru: பெங்களூரு நகைக்கடையில் அத்துமீறி நுழைந்த இருவர் துப்பாக்கிச்சூடு; இருவர் காயம்!

Marimuthu M HT Tamil

Mar 14, 2024, 05:19 PM IST

Shoot At Bengaluru: பெங்களூரு நகைக்கடையில் அத்துமீறி நுழைந்த இருவர் அதிரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது இருவர் காயம் அடைந்தனர்.
Shoot At Bengaluru: பெங்களூரு நகைக்கடையில் அத்துமீறி நுழைந்த இருவர் அதிரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது இருவர் காயம் அடைந்தனர்.

Shoot At Bengaluru: பெங்களூரு நகைக்கடையில் அத்துமீறி நுழைந்த இருவர் அதிரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது இருவர் காயம் அடைந்தனர்.

Shoot At Bengaluru: கர்நாடக மாநிலம், பெங்களூரு - கொடிகேஹள்ளி பகுதியில் இன்று காலை 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் காயம் அடைந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Google CEO Sundar Pichai: ‘இது புதுசு’-கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷன் அறிமுகம்.. இதுல என்ன ஸ்பெஷல்!

YouTube blocks: நீதிமன்றம் தடை.. ஹாங்காங்கில் போராட்ட பாடலை முடக்கிய யூடியூப் தளம்

Sushil Kumar Modi dies: பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி காலமானார்-கண்கலங்கிய மத்திய அமைச்சர்!

Kurkure craving sparks divorce:‘குர்குரே வாங்கித் தரல’-கணவரிடம் விவாகரத்து கோரிய பெண்

பெங்களூரு தேவி நகரில் உள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை 11 மணியளவில் மோட்டார் இருசக்கர வாகனத்தில் இந்த கடைக்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், நகைக்கடை உரிமையாளரிடம் கல்லாவில் இருக்கும் பணத்தினை தரச் சொல்லி வற்புறுத்தினர். அப்போது நகைக்கடை உரிமையாளர் பணத்தை தர மறுத்ததால், அந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நகைக்கடை உரிமையாளரும், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியரும் நன்கு காயம் அடைந்தனர்.

மொத்தம் மூன்று முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டவர்கள், கொள்ளை அடிக்காமல் அங்கிருந்து தப்பியுள்ளனர். துப்பாக்கியால் சுட்ட அடையாளம் தெரியாத நபர்கள், நகைக்கடை உரிமையாளரை திட்டமிட்டு கொல்ல வந்ததாகவும் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த மக்களைப் பார்த்துவிட்டு, துப்பாக்கியால் சுட்ட அடையாளம் தெரியாத நபர்கள், தாங்கள் பயன்படுத்திய துப்பாக்கியை அங்கேயே விட்டுவிட்டு அருகில் இருந்த பைக்கில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

தற்போது சம்பவ இடத்துக்கு வந்து போலீசார், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த அப்பு ராம் மற்றும் ஆனந்த் ராம் அருகில் இருந்த மருத்துவமனையில் காயம் அடைந்தனர்.

இதேபோல் கடந்தாண்டு தமிழ்நாட்டில் நடந்த க்ரைம்:

இதேபோல் தமிழ்நாட்டிலும் கடந்தாண்டு, செப்டம்பர் 8ஆம் தேதி திமுக நிர்வாகி இளைய ராஜா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தியாகராஜன். இவரது மகன் தியாக, இளையராஜா இவர் தற்போது திமுகவில் இருந்து வருகிறார். இந்த நிலையில் மணவாள நல்லூர் கிராமத்தில் உள்ள அவரது விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யும் போது அதே ஊரை சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் உள்ளாட்சித் தேர்தல் முன் விரோதம் காரணமாக, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து இரண்டு கை துப்பாக்கி மூலம் சுட முயற்சி செய்யும்போது காரில் தப்பிக்க முயன்றார்.

அப்போது இளையராஜாவை மடக்கி அந்த கும்பல் சுட்டதில் இடுப்பு, கழுத்து உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் அடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடலூரில் திமுக நிர்வாகி இளையராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக 6 பேர் பிடிபட்டனர். கடலூர் தனியார் மருத்துவமனையில் வைத்து ஆடலரசு, புகழேந்தி உள்பட 6 பேரை கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்த துப்பாக்கி உரிமம் இல்லாதது என தெரியவந்துள்ளது. 2 துப்பாக்கிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9   

டாபிக்ஸ்

அடுத்த செய்தி