தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  இந்தியாவிலும் டுவிட்டர் ப்ளூ சேவை அறிமுகம்! மாத சந்தா தொகை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவிலும் டுவிட்டர் ப்ளூ சேவை அறிமுகம்! மாத சந்தா தொகை எவ்வளவு தெரியுமா?

Feb 09, 2023, 02:33 PM IST

Twitter Blue in India: டுவட்டர் நிறுவனம் சந்தா செலுத்தி பெறப்படும் தனது பிரீமியம் சேவையான டுவிட்டர் ப்ளூவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் டுவிட்டர் ப்ளூ டிக் சேவை பெறுவதற்கான சந்தா தொகையிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது.
Twitter Blue in India: டுவட்டர் நிறுவனம் சந்தா செலுத்தி பெறப்படும் தனது பிரீமியம் சேவையான டுவிட்டர் ப்ளூவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் டுவிட்டர் ப்ளூ டிக் சேவை பெறுவதற்கான சந்தா தொகையிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது.

Twitter Blue in India: டுவட்டர் நிறுவனம் சந்தா செலுத்தி பெறப்படும் தனது பிரீமியம் சேவையான டுவிட்டர் ப்ளூவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் டுவிட்டர் ப்ளூ டிக் சேவை பெறுவதற்கான சந்தா தொகையிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது.

சந்தா செலுத்தி பெறப்படும் டுவிட்டர் ப்ளூ சேவை தற்போது அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரேசில், இந்தோனிஷியா, நியூசிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Sushil Kumar Modi dies: பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி காலமானார்-கண்கலங்கிய மத்திய அமைச்சர்!

Kurkure craving sparks divorce:‘குர்குரே வாங்கித் தரல’-கணவரிடம் விவாகரத்து கோரிய பெண்

HBD Mark Zuckerberg: ‘ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய ரிஸ்க்’- மார்க் ஜுக்கர்பெர்க் பிறந்த நாள் இன்று

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன

ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு ஆகிய இரு சாதங்களில் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல் டுவிட்டரை இணையத்தில் பயன்படுத்துவோரும் இந்த சேவையை பெறலாம். ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மாதந்திர கட்டணமாக ரூ. 900, இணைய பயனாளர்களுக்கு ரூ. 650 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆண்டு கட்டணமாக ரூ. 6,800 செலுத்த வேண்டும்.

டுவிட்டர் ப்ளூ சேவை அறிமுகம் செய்யப்படுதற்கு முன்னர், சரிபார்க்கப்பட்ட கணக்குகளை உறுதி செய்யும் விதமாக அளிக்கப்பட்ட ப்ளூ டிக் பெறுவதற்கு சந்தா கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

அதேசமயம் ப்ளூ டிக் தவிர, டுவிட் எடிட் அம்சம், புக்மார்க் போல்டர்கள் உள்பட சில அம்சங்கல் ப்ளூ டிக் பயனாளர்களுக்கு அளிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு நிறங்களில் தீம்களை தேர்வு செய்யும் விதமாகவும், ரிப்ளை செய்யும் டுவிட்களை முன்னுரிமை கொடுக்கும் வாய்ப்பும், பதிவிடும் டுவிட் மற்ற பயனாளர்கள் பார்வைக்கு தோன்றுவதற்கு முன்னர் Undo செய்யும் விதமான வாய்ப்பும் இடம்பிடித்திருந்தது.

மிக முக்கியமாக பயனாளர்கள் 4 ஆயிரம் எழுத்துகள் வரை டுவிட் செய்து கொள்ளும் வசதியும் இடம்பிடித்திருந்தது. தற்போது சந்தா செலுத்தாத பயனாளர்கள் 280 எழுத்துகள் மட்டுமே டுவிட் செய்ய முடியும்.

பணம் செலுத்தி சேவை பெறுவோர் 60 நிமிடம் அல்லது 2 ஜிபி அளவு விடியோக்களையும் அப்லோட் செய்து கொள்ளலாம்.

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் அதில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளார். முதலில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் இருந்த வந்த நிலையில், அதில் பல்வேறு நிறங்களை மாற்றி அமைத்தார். அதன்படி தனிநபர் அதிகாரப்பூர்வ கணக்குக்கு நீள நிறமும், வணிக கணக்குகளுக்கு தங்க நிறமும், அரசு சார்ந்த கணக்குகளுக்கு க்ரே நிறமும் என டிக்குகள் மாற்றப்பட்டது.

இதன் பின்னர் சந்தா செலுத்தி பல்வேறு வசதிகள் மற்றும் அம்சங்களுடன் கூடிய டுவிட்டர் ப்ளூ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

அடுத்த செய்தி