தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Train Accident: பராமரிப்பு பணியாளர்கள் மீது ரயில் மோதி விபத்து - 4 பேர் பலி

Train Accident: பராமரிப்பு பணியாளர்கள் மீது ரயில் மோதி விபத்து - 4 பேர் பலி

Feb 13, 2023, 01:50 PM IST

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ரயில் வண்டி தவறுதலாக பாதை மாறி சென்றதில் அங்கு பணியாற்றியே ரயில்வே ஊழியர்கள் மீது மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ரயில் வண்டி தவறுதலாக பாதை மாறி சென்றதில் அங்கு பணியாற்றியே ரயில்வே ஊழியர்கள் மீது மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ரயில் வண்டி தவறுதலாக பாதை மாறி சென்றதில் அங்கு பணியாற்றியே ரயில்வே ஊழியர்கள் மீது மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே லசல்கான் அருகே இன்று காலை இந்த கோர விபத்த நிகழ்ந்துள்ளது. காலை 5.44 மணியளவில் டவுர் வாகன் ரயில் (பராமரிப்பு பணி வண்டி) லசல்கான் ரயில் நிலையத்திலிருந்து உகாவ் நோக்கி செல்ல வேண்டிய ரயில் தவறுதலாக பாதையில் மாற்றிவிடப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Modi: ‘2029ஆம் ஆண்டுக்கு பின்னும் நரேந்திர மோடிதான் தலைவர்!’ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி!

Kangana Ranaut: ’50 எல்.ஐ.சி பாலிஸிக்களா!’ கங்கனாவின் சொத்து மதிப்பு குறித்து வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!

Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த - உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்

Google CEO Sundar Pichai: ‘இது புதுசு’-கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷன் அறிமுகம்.. இதுல என்ன ஸ்பெஷல்!

இதையடுத்து அந்த பாதயைில் 15 முதல் 17 வரையிலான போல் பகுதியில் பணிபுரிந்த ஊழியர்கள் மீது எதிர்பாராதவிதமாக ரயில் மோதியது. இந்த விபத்தில் நான்கு ஊழியர்கள் பரிதமாபாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த விபத்து தொடர்பாக மூத்த ரயில்வே அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு பின்னர் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

வழக்கமாக ரயில்வே பராமரிப்பு மேற்கொள்ளும் பாதையில் எந்தவொரு ரயிலும் திருப்புவிடப்படாது. ஆனால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது தெரிந்தும், மாற்றுப்பாதையில் திருப்பாமல் பராமரிப்பு பாதையில் ரயில் திருப்பிவிடப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இப்படி இருக்கையில் இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி