தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Tirupathi: இதுவரை இல்லாத அளவு அதிக உண்டியல் காணிக்கை… எவ்வளவு தெரியுமா?

Tirupathi: இதுவரை இல்லாத அளவு அதிக உண்டியல் காணிக்கை… எவ்வளவு தெரியுமா?

Feb 03, 2023, 01:35 PM IST

நடப்பு நிதி ஆண்டான 2022-23இல், ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1,500 கோடி வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டான 2022-23இல், ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1,500 கோடி வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டான 2022-23இல், ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1,500 கோடி வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி 2023 ஜனவரி மாதம் வரை 10 மாதங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் ரூ. 1,275 கோடி 31 லட்சம், கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

அதன்படி, ஏப்ரல் மாதம் ரூ. 126 கோடி 65 லட்சம்,மே மாதம் ரூ. 130 கோடி 29 லட்சம், ஜூன் மாதம் ரூ. 123 கோடி 76 லட்சம், ஜூலை மாதம் ரூ. 139 கோடி 75 லட்சம், ஆகஸ்ட் மாதம் ரூ. 138 கோடி 34 லட்சம், செப்டம்பர் மாதம் ரூ. 122 கோடி 19 லட்சம், அக்டோபர் மாதம் ரூ. 122 கோடி 80 லட்சம், நவம்பர் மாதம் ரூ. 125 கோடி 30 லட்சம், டிசம்பர் மாதம் 123 கோடி 16 லட்சம் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து 2023ஆம் ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியில் ரூ. 123 கோடி 7 லட்சம் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இதன்மூலம் கடந்த 10 மாதங்களில் வரை ரூ. 1,275 கோடியே 31 லட்சம் தற்போது வரை காணிக்கையாக வருமானம் கிடைத்துள்ளது.

இதற்கு முன் இல்லாத வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு ரூ. 100 கோடி மேல் அதிக தொகையை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இன்னும் நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு மாதங்களில் வரும் காணிக்கையை கணக்கிட்டால் ரூ. 1,500 கோடி வரை வருமானம் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி