தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Thrissur Pooram 2024: உலகப்புகழ் பெற்ற திருச்சூர் பூரம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

Thrissur Pooram 2024: உலகப்புகழ் பெற்ற திருச்சூர் பூரம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil

Apr 19, 2024, 03:40 PM IST

திருச்சூர் பூரம் 2024: உலகப்புகழ் பெர்ற திருச்சூர் பூரம் திருவிழாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த தொகுப்பில் காணலாம். (HT Archive)
திருச்சூர் பூரம் 2024: உலகப்புகழ் பெர்ற திருச்சூர் பூரம் திருவிழாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த தொகுப்பில் காணலாம்.

திருச்சூர் பூரம் 2024: உலகப்புகழ் பெர்ற திருச்சூர் பூரம் திருவிழாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த தொகுப்பில் காணலாம்.

Thrissur Pooram 2024: திரிச்சூர் பூரம் கேரளாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு பெரிதும் பங்களிக்கும் ஒரு திருவிழாவாகும். திருச்சூர் பூரம் ஒரு கோயில் திருவிழாவாக இருந்தாலும், சாதி, இனம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. இசை, ஊர்வலம், திருவிழா மற்றும் வானவேடிக்கைகளுடன் திருவிழாவைக் கொண்டாட மக்கள் ஒன்றிணைகிறார்கள். இந்த ஆண்டிற்கான பூரம் விழா நாளை தொடங்க உள்ள நிலையில், திருச்சூர் பூரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

திருச்சூர் பூரம் பற்றிய சுவாரஸ்யமான மற்றும் அதிகம் அறியப்படாத உண்மைகள்

  • திருச்சூர் பூரம் விழா 7 நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். இதில், ஆறாவது நாள் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் திருச்சூர் பூரம் கோலாகலமாக கொண்டாடப்படும். இது மலையாள மாதமான மேட (மேஷம்) மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. பூரம் நட்சத்திரத்துடன் சந்திரன் உதிக்கும் போது இந்த விழா கொண்டாடப்படுகிறது. அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பூரம் விழா, யானைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பூரம் விழா நாளை (ஏப்ரல் 20) ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் நடைபெற உள்ளது.
  • 1790 முதல் 1805 வரை கொச்சியை ஆண்ட சக்தன் தம்புரான், 1796 ஆம் ஆண்டில் திருச்சூர் பூரத்தைத் தொடங்கினார். முன்பெல்லாம் ஆறாட்டுப்புழா பூரம் கோவிலுக்கு கோயில்கள் செல்வது வழக்கம். இருப்பினும், அந்த ஆண்டு, பலத்த மழை காரணமாக, கோயில்கள் ஆறாட்டுப்புழா பூரத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே, ஷக்தன் தம்புரான் தனது சொந்த கோயில் திருவிழாவை திருச்சூரில் தொடங்க முடிவு செய்தார். அதனால் திருச்சூர் பூரம் கொண்டாடப்பட்டது.
  • திருச்சூர் வடக்குநாதர் கோயில் அமைந்திருக்கும் தேக்கின்காடு பகுதியில், ‘திருச்சூர் பூரம் திருவிழா’ நடத்தப்படுகிறது. இந்தத் திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், லாலூர் பகவதி கோயில், ஸ்ரீ கார்த்தியாயானி கோயில், கனிமங்கலம் கோயில், நேதிலா காவு பகவதி கோயில், பரமேக்காவு பகவதி கோயில், பனமுக்கும்பள்ளி சாஸ்தா கோயில், பூக்கட்டிக்கரா - காரமுக்கு பகவதி கோயில், செம்புக்காவு பகவதி கோயில் மற்றும் பரக்கோட்டுகாவு பகவதி கோயில் உள்ளிட்ட கோயில்களில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படும் யானைகள் திருச்சூர் பூரத்தில் பங்கேற்கும்.
  • இந்த நாளில், திருச்சூரின் தெக்கின்காடு மைதானத்தில் அலங்கரிக்கப்பட்ட 50 யானைகள் பாரம்பரிய இசையுடன் அணிவகுத்து நிற்பது சிறப்பாக இருக்கும். சுமார் 36 மணி நேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இவ் விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எதிர் எதிர் திசைகளில் நின்று முத்துக்குடை பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்தத் திருவிழாவில் யானைகள் அலங்காரம் மற்றும் வண்ணமயமான முத்துக்குடைகள் ஆகியவற்றைக் காண்பதற்காக கேரளா, தமிழகம் மட்டுமில்லாமல், கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இந்த புனித நாளில் வடக்குநாதனுக்கு பிரார்த்தனை செய்கிறார்கள். வேடிக்கேட்டில் நடைபெறும் வாணவேடிக்கை நிகழ்ச்சி இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி