தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  தகாத உறவு விவகாரம்.. பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர், பெண் எம்.பி.,..!

தகாத உறவு விவகாரம்.. பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர், பெண் எம்.பி.,..!

Karthikeyan S HT Tamil

Jul 18, 2023, 03:21 PM IST

Singapore: சிங்கப்பூரில் நாடாளுமன்ற சபாநாயகரும், பெண் எம்பி ஒருவரும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
Singapore: சிங்கப்பூரில் நாடாளுமன்ற சபாநாயகரும், பெண் எம்பி ஒருவரும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Singapore: சிங்கப்பூரில் நாடாளுமன்ற சபாநாயகரும், பெண் எம்பி ஒருவரும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தகாத உறவு விவகாரம் தொடர்பாக சிங்கப்பூரில் நாடாளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்பியும் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

Blue Origin Space Tourism: ப்ளூ ஆர்ஜின் விண்வெளி பயணத்தில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி பைலட்

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக ஆளும் கட்சியைச் சேர்ந்த டான் சுவான் ஜின் (54) பதவி வகித்து வந்தார். இவருக்கு திருமணமாகிய நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் பெண் எம்.பியான செய் லீ ஹூயிவுடன் டான் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த விவகாரம் வெளி உலகுக்கு தெரிய வந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் கூறுகையில், மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் ராஜினாமா கடிதங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தகாத உறவில் இருந்தது தெரியவந்தது. அதை கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது தொடர்ந்தது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் கூறினேன். ஆனால், அது தொடர்ந்தபடியே இருந்தது. இதனால் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன்." என்றார்.

டான் சுவான் ஜின் எழுதிய ராஜினாமா கடிதத்தில் தனது குடும்பத்தில் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். கடந்த வாரம், போக்குவரத்துகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். சிங்கப்பூரில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்குவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி