தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ram Jethmalani: ‘பாகிஸ்தான் அகதி To இந்தியாவின் சட்டபுலி’ சர்ச்சை மன்னன் ராம்ஜெத் மலானியின் கதை!

Ram Jethmalani: ‘பாகிஸ்தான் அகதி To இந்தியாவின் சட்டபுலி’ சர்ச்சை மன்னன் ராம்ஜெத் மலானியின் கதை!

Kathiravan V HT Tamil

Sep 14, 2023, 06:20 AM IST

”தனது சுதந்திரமான நிலைப்பாட்டிற்காக விமர்சிக்கப்பட்ட அதே வேளையில் அவர் கொண்டாடவும்பட்டார்.”
”தனது சுதந்திரமான நிலைப்பாட்டிற்காக விமர்சிக்கப்பட்ட அதே வேளையில் அவர் கொண்டாடவும்பட்டார்.”

”தனது சுதந்திரமான நிலைப்பாட்டிற்காக விமர்சிக்கப்பட்ட அதே வேளையில் அவர் கொண்டாடவும்பட்டார்.”

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ராம் ஜேத்மலானி, பல தசாப்தங்களாக இந்திய அரசியல் மற்றும் சட்டத்துறையில் கோலோச்சிய சட்டப்புலியாக இன்றும் நினைவுக்கூறப்பட்டு வருகிறார். அவரின் ஆழ்ந்த சட்ட அறிவு, அச்சமற்ற வாதிடும் திறனால் எப்போதும் சர்ச்சைக்குள்ளான நபராக ராம்ஜெத் மலானி முத்திரைப்பதித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Blue Origin Space Tourism: ப்ளூ ஆர்ஜின் விண்வெளி பயணத்தில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி பைலட்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

சிந்து மாகாணம் 

ராம் பூல்சந்த் ஜெத்மலானி செப்டம்பர் 14ஆம் தேதி 1923ஆம் ஆண்டு தற்போதைய பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள ஷிகர்பூரில் பிறந்தார். கராச்சியில் உள்ள எஸ்.சி.ஷாஹானி சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை முடித்தார். கராச்சியில் தனது நண்பர் ஏ.கே.ப்ரோஹி உடன் இணைந்து சொத்த சட்டநிறுவனத்தை தொடங்கினார். ஆனால் 1947 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை அவரது வாழ்கையை புரட்டிப்போட்டது.

அகதியாக இந்தியா வருகை

தனது நண்பர் ப்ரோஹியின் ஆலோசனையின் பேரில் தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் அகதியாக வந்தபோது அவரது பையில் வெறும் 10 ரூபாய் மட்டுமே இருந்தது. சில நாட்கள் அகதில்கள் முகாமில் தனது வாழ்கையை கழித்த ஜெத்மலானி பம்பாய் அகதிகள் சட்டம் அகதிகளை மனிதாபிமானம் அற்ற முறையில் நடத்துவதாக கூறி பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் அதில் வெற்றியும் பெற்றார்.

சர்ச்சையும் சட்ட தொழிலும்

1956 ஆம் ஆண்டு நடந்த இந்திய கடற்படை தளபதி நானாவதி கொலை வழக்கில் ஆஜரானதன் மூலம்தான் அதிகப் பிரபலமானார் ராம் ஜெத்மலானி தனது தொழில் வாழ்க்கை முழுவதும், ஹாஜி மஸ்தான், எல்.கே. அத்வானி, அமித் ஷா மற்றும் ஹர்ஷத் மேத்தா என இந்தியாவின் பிரபல அரசியல்வாதிகள், கடத்தல்காரர்கள், தொழிலதிபர்கள் மீதான பல முக்கிய வழக்குகளில் வாதாடினார்.

1960களில் மும்பையை கலக்கிய பிரபல கடத்தல்காரர்களுக்கு ஆதரவாக ஆஜரானதால் அவருக்கு ‘கடத்தல்காரர்களின் வழக்கறிஞர்’ என்ற அடைமொழி பற்றிக்கொண்டது. ஆனால் ஒரு வழக்கறிஞராக தனது கடமையை மட்டுமே செய்வதாக தன்மீதான விமர்சனங்களுக்கு அவர் பதில் அளித்தார்.

சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் நிலைப்பாடுகள்

ராம் ஜேத்மலானியின் வாழ்க்கையை வரையறுத்த ஒரு அம்சம், சர்ச்சைக்குரிய வழக்குகளை அவர் எடுத்துக்கொள்வதற்கான விருப்பமும், தனது கட்சிக்காரரை பாதுகாப்பதில் அவர் மேற்கொள்ளும் சிரத்தையும் ஆகும். ஊழல், பயங்கரவாதம் மற்றும் அரசியல் சர்ச்சைகள் தொடர்பான வழக்குகளில் அவர் பிரதிவாதிகளின் பிரதிநிதித்துவம் அடிக்கடி விமர்சனங்களைப் பெற்றது. எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்டாலும், ஒவ்வொரு தனிநபருக்கும் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்திற்கான உரிமை உண்டு என்று ஜெத்மலானி நம்பினார்.

1992 செக்யூரிட்டி மோசடியில் ஈடுபட்ட பிரபல பங்கு தரகர் ஹர்ஷத் மேத்தாவை அவர் பிரதிநிதித்துவப்படுத்தியது அவரது வாழ்க்கையில் மிகவும் சர்ச்சைக்குரிய காலகட்டங்களில் ஒன்றாகும். மேத்தாவை அவர் தளராத தற்காப்பு பாராட்டையும் விமர்சனத்தையும் ஈர்த்தது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் விடுதலைக்காக ராம்ஜெத் மலானி வாதாடினார். ஹவாலா வழக்கு, செராபுதீன் என்கவுண்டர் வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, எடியூரப்பா மீதான சுரங்க ஊழல் வழக்கு, சிவசேனாவுக்கு எதிரான கிருஷ்ணதேசாய் கொலை வழக்கு, ஆசாரம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு, லாலுபிரசாத் யாதவ் மீதான தீவன ஊழல் வழக்கு, சஹாரா முறைகேடு வழக்கு என அவர் வாதாடிய வழக்குகள் தேசிய அளவில் சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்துவதாக அமைந்தது.

அரசியல் வாழ்கை

ஜேத்மலானியின் வழக்கறிஞர் வாழ்க்கை அரசியலோடு பின்னிப் பிணைந்தது. அவசரநிலைக்காலத்தில் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக இருந்தபோது பிரதமர் இந்திரா காந்தியை ராம்ஜெத் மலானி கடுமையாக விமர்சித்தார். கனடா சென்ற அவர் அங்கிருந்தபடியே பம்பாய் வடமேற்கு மக்களவை தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்து அத்தேர்தலில் வென்றார்.

1996ஆம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில் மத்திய சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும், 1998ஆம் ஆண்டில் மத்திய நகர்புற விவகாரங்கள் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இருப்பினும் பாஜகவில் இருந்து கருத்து வேறுபாட்டால் விலகிய அவர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் லக்னோ தொகுதியில் வாஜ்பாயை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு தோற்றார். 2010ஆம் ஆண்டு பாஜக அவருக்கு ராஜ்ஜியசபா உறுப்பினர் பதவியை வழங்கியது. பாஜகவுக்கு எதிரான அறிக்கைகளை வழங்கியதால் 2013ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து ஜெத்மலானி நீக்கப்பட்டார்.

மறைவு

வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஜெத்மலானி செப்டம்பர் 8, 2019ஆம் ஆண்டு காலமானார். அவரின் சுதந்திரமான நிலைப்பாட்டிற்காக விமர்சிக்கப்பட்ட அதே வேளையில் அவர் கொண்டாடவும்பட்டார்.

அடுத்த செய்தி