தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Free Ration Scheme Extension: இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு!

Free Ration Scheme Extension: இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு!

Sep 28, 2022, 02:58 PM IST

பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடுக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஏழை மக்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள் இதனால் மிகவும் கஷ்டப்பட்டனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Modi: ‘2029ஆம் ஆண்டுக்கு பின்னும் நரேந்திர மோடிதான் தலைவர்!’ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி!

Kangana Ranaut: ’50 எல்.ஐ.சி பாலிஸிக்களா!’ கங்கனாவின் சொத்து மதிப்பு குறித்து வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!

Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த - உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்

Google CEO Sundar Pichai: ‘இது புதுசு’-கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷன் அறிமுகம்.. இதுல என்ன ஸ்பெஷல்!

இதன் காரணமாக பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட வந்த ரேஷன் பொருட்கள் கூடுதலாக, ஐந்து கிலோ அரிசி, பருப்பு வகைகள், கோதுமை 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இலவசமாக வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றின் தாக்கம் நிற்காத காரணத்தால் இரண்டாவது அலையின் போது, இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம் 80.96 கோடி பேர் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் நாளை மறுதினத்துடன் முடிவடைய இருந்தது.

இந்நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு இந்த இலவச ரேஷன் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் இலவசமாக மேலும் மூன்று மாதங்களுக்கு ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அடுத்த செய்தி