தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட உலகிற்கு பிரதமர் மோடியின் யோசனை என்ன?

பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட உலகிற்கு பிரதமர் மோடியின் யோசனை என்ன?

Priyadarshini R HT Tamil

Apr 15, 2023, 08:53 AM IST

PM Modi : நமது அன்றாட பழக்கவழக்க மாற்றங்கள் எப்படி பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் என்பது குறித்து உலக வங்கி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
PM Modi : நமது அன்றாட பழக்கவழக்க மாற்றங்கள் எப்படி பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் என்பது குறித்து உலக வங்கி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

PM Modi : நமது அன்றாட பழக்கவழக்க மாற்றங்கள் எப்படி பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் என்பது குறித்து உலக வங்கி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் இந்தியர்களின் பங்கை எடுத்துக்காட்டி பேசினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Blue Origin Space Tourism: ப்ளூ ஆர்ஜின் விண்வெளி பயணத்தில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி பைலட்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

நமது பழக்கவழக்க மாற்றங்கள் எப்படி பருவநிலை மாற்றத்தை சமாளிக்க உதவும் என்பதில் இந்தியாவின் பார்வை குறித்து பேசிய பிரதமர் மோடி, பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் ஒரு சக்தி வாய்ந்த வழியாக நமது அன்றாட பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்துவதில் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அந்த நல்ல பழக்க வழக்கங்கள் துவங்க வேண்டும் என்று அவர் பேசினார்.

கால நிலை மாற்றங்களை எதிர்த்து கருத்தரங்க மேஜைகளில் இருந்து போராட முடியாது. வீட்டின் உணவு மேஜைகளில் இருந்து அந்த மாற்றங்கள் வரவேண்டும். கருத்தரங்க மேஜைகளில் தோன்றும் யோசனைகள் உணவு மேஜைக்குச் செல்ல வேண்டும். அது ஒரு பெரிய இயக்கமாக மாறவேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும், ஒவ்வொரு தனிநபரும், அவர்களின் தேர்வுதான் இந்த கோள் நல்ல முறையில் இயங்க வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணரவேண்டும் என்று பிரதமர் மோடி விர்சுவல் மோடில், உலக வங்கியின் எப்படி பழக்கவழக்கங்கள் காலநிலை பிரச்னைகளை சமாளிக்க முடியும் என்ற தலைப்பில் பேசுகையில் தெரிவித்தார்.

இது லைஃப் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. மிஷன் லைஃப் என்பது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பு ஆகும். அவர்களின் சிறிய பழக்க வழக்க மாற்றங்கள் எப்படி சக்திவாய்ந்தவை என்று உணர்ந்து அவர்களின் நடவடிக்கைகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க எவ்வாறு உதவும் என்று அவர்கள் தெரிந்து கொண்டு தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்வார்கள் என்று மோடி மேலும் பேசினார்.

நாம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள உள்ள பெரிய சவால்களான சுற்றுச்சூழல், பருவநிலை மற்றும் சக்தி ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதில், பிரதமர் மோடியின் உரை உலக தலைவர்கள் தங்கள் யோசனையை மேம்படுத்த உதவும். அவர் இந்திய மக்கள் சுற்றுச்சூழலை காக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டி, அது ஏற்படுத்தி விளைவுகளை சுட்டிக்காட்டி பேசினார்.

இந்திய மக்கள் கடந்த சில ஆண்டுகளின் நிறைய நல்ல விஷயங்களை செய்துள்ளார்கள். இந்தியாவில் பாலின விகிதத்தை அதிகரிக்கவும் முயற்சி எடுத்துள்ளார்கள். மக்களே பொது இடங்களை சுத்தம் செய்வதில் முனைப்பு காட்டி வருகிறார்கள். கடற்கரை, சாலைகள் ஆகிய இடங்களை சுத்தமாக வைப்பதில் முனைப்புகாட்டி வருகிறார்கள். பொது இடங்கள் தூய்மையாக இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். எல்இடி பல்புகளை அவர்கள் பயன்படுத்த துவங்கினார்கள். வளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்தியது இந்தியாவில் மாற்றங்களை கொண்டு வந்தது எப்படி என்று மோடி பேசினார்.

இந்த நடவடிக்கைகள் 22 பில்லியன் யுனிட் மின்சாரம், 9 டிரில்லியன் லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை சேமிக்கிறது. 375 மில்லியன் மறுசுழற்சி செய்யப்படுகிறது. 1 மில்லியின் டன் இ-வேஸ்டை குறைக்கிறது. 2030ல் கூடுதலாக 170 மில்லியன் டாலர் சேமிக்க உதவுகிறது அல்லது 15 பில்லியன் டன் உணவு சேதத்தை தடுக்கிறது.

பழக்கவழக்க மாற்றங்கள் குறித்து பேசும்போது, உலக வங்கி பருவநிலை நிதியை 26 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் வரை உயர்த்துகிறது என்றும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டு, இதுவரை இந்திய பருவநிலை மாற்றத்தை எதிர்த்து செய்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

இதில் கலந்துகொண்ட உலக வங்கி தலைவர் டேவிட் மாலாபாஸ் இந்தியாவின் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி வாயிலாக கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது. போதிய நிதிக்கொள்கைகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு வகுக்கப்படும் என்று டிவீட் செய்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி