தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Oscar: பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘ஆஸ்கர் மங்கைகள்’!

Oscar: பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘ஆஸ்கர் மங்கைகள்’!

Manigandan K T HT Tamil

Mar 30, 2023, 07:31 PM IST

The Elephant Whisperers: ‘புத்திசாலித்தனமான குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர்’ (@narendramodi)
The Elephant Whisperers: ‘புத்திசாலித்தனமான குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர்’

The Elephant Whisperers: ‘புத்திசாலித்தனமான குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர்’

முதுமலை யானைகள் முகாமில் எடுக்கப்பட்ட ஆவணப் படமான "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப் படத்திற்கான குறும்படப் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

இந்த ஆவணப்படத்தை தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகி எடுத்திருந்திருந்தார்.

அவரும், இந்த ஆவணப்படத்தை தயாரித்த குனீத் மோங்காவும், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆஸ்கர் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்தின் புத்திசாலித்தனமும் வெற்றியும் உலகளாவிய கவனத்தையும் பாராட்டுகளையும் ஈர்த்துள்ளது. இன்று, அதனுடன் தொடர்புடைய புத்திசாலித்தனமான குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர் என்று அவர்கள் உடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து டுவிட்டரில் இவ்வாறு பிரதமர் மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.

இந்த ஆவணக் குறும்படத்தை கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கியுள்ளார். தமிழ்நாடு வனத்துறையின் பராமரிப்பாளர்களால் இளம் யானைக் குட்டிகள் வளர்க்கப்படும் முறையை இந்தப் படம் விவரிக்கிறது.

இந்த ஆவணக் குறும்படத்தை கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கியுள்ளார். தமிழ்நாடு வனத்துறையின் பராமரிப்பாளர்களால் இளம் யானைக் குட்டிகள் வளர்க்கப்படும் முறையை இந்தப் படம் விவரிக்கிறது.

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பணியாற்றி வரும் பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய யானை பராமரிப்பாளர்களால் ஆறு மாத வயதில் முகாமிற்கு கொண்டு வரப்பட்ட “ரகு” யானைக் குட்டியை மேற்படி பராமரிப்பாளர்கள் எவ்வாறு கவனத்துடன் பராமரித்தார்கள் என்பதை ஆவணப்படம் காட்டுகிறது.

இப்படம் அதே முகாமில் காப்பாளர்களால் வளர்க்கப்பட்ட மற்றொரு யானைக் குட்டியான “அம்மு” பராமரிக்கப்பட்ட கதையையும் விவரிக்கிறது.

பொம்மன்-பெல்லி தம்பதியை அழைத்து முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன், அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கினார்.

அடுத்த செய்தி