தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐ-போனை கொடுக்கச் சென்ற டெலிவரி நபருக்கு ஏற்பட்ட கொடுமை…

ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐ-போனை கொடுக்கச் சென்ற டெலிவரி நபருக்கு ஏற்பட்ட கொடுமை…

Priyadarshini R HT Tamil

Feb 20, 2023, 11:38 AM IST

கர்நாடக மாநிலத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐ-போனுக்கு கொடுக்க பணம் கேட்ட டெலிவரி நபரைக் கத்தியால் குத்தி, சாக்கில் மூட்டைக்கட்டி, ரயில் நிலையத்தில் கொண்டு எரித்த கொடூரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐ-போனுக்கு கொடுக்க பணம் கேட்ட டெலிவரி நபரைக் கத்தியால் குத்தி, சாக்கில் மூட்டைக்கட்டி, ரயில் நிலையத்தில் கொண்டு எரித்த கொடூரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐ-போனுக்கு கொடுக்க பணம் கேட்ட டெலிவரி நபரைக் கத்தியால் குத்தி, சாக்கில் மூட்டைக்கட்டி, ரயில் நிலையத்தில் கொண்டு எரித்த கொடூரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே (தாலுகா) டவுன் அஞ்சேகொப்பலு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பாதியளவில் உடல் எரிந்த நிலையில்வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரிசிகெரேடவுன் போலீசார் அங்கு விரைந்து வந்து, அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Fact Check: சீனாவின் அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் காந்தி பரப்புரை செய்தாரா?..வைரல் போட்டோவின் உண்மை என்ன?

Fact Check : அசாதுதீன் ஒவைசி ராமரின் ஓவியத்தை வைத்திருப்பது போன்று வைரலாகும் புகைப்படம்.. உண்மையில் நடந்தது என்ன?

Rajiv Gandhi death anniversary: ’இந்திராவின் மகன் முதல் இந்தியாவின் பிரதமர் வரை!’ ராஜீவ் காந்தியின் நினைவலைகள்!

International Tea Day: அண்ணே ஒரு டீ போடுங்க.. சர்வதேச தேயிலை தினம் வந்தது எப்படி?

அவர்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா?” என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் தனிப்படை அமைத்தும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

அதில் இறந்து கிடந்த நபர், ஹேமந்த் நாயக் (23) என்பதும், அவர்ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் பொருட்களை வீடு, வீடாக சென்று டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. ஹேமந்த் நாயக், கடந்த 7ம் தேதி வேலைக்கு சென்றிருந்தார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர் காணாமல்போனது குறித்துஅவரது சகோதரர் மஞ்சு நாயக், கடந்த 8ம் தேதி அரிசிகெரே போலீசில் புகார் கொடுத்தார். 

அதன்அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் கடைசியாக விலைஉயர்ந்த ஐ-போனை அரிசிகெரே டவுன் லட்சுமிபுரா படாவனே பகுதியில் வசித்துவரும் ஹேமந்த் தத்தா (20) என்பவருக்கு டெலிவரி செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் ஹேமந்த்தத்தாவை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் தான் ஹேமந்த் நாயக்கை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்புஹேமந்த் தத்தா ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ஐ-போன் ஒன்றைஆர்டர் செய்துள்ளார். அதற்கு டெலிவரியின்போது பணம் செலுத்துவதாக கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி ஐ-போனை, ஹேமந்த் தத்தாவிடம், ஹேமந்த் நாயக் டெலிவரி செய்துள்ளார். பின்னர் செல்போனுக்காக ரூ.46 ஆயிரத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால், ஹேமத் தத்தாவிடம்பணம் இல்லை. அதனால் அவர் ஹேமந்த் நாயக்கிடம்பணம் தருவதாக கூறி தன்னுடைய வீட்டுக்குள்அழைத்துச்சென்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 

பின்னர்அவரது உடலை வீட்டிலேயே 4 நாட்களாகமறைத்து வைத்திருந்தார். கடந்த 11ம் தேதி அன்று இரவு ஹேமந்த் நாயக்கின் உடலை சாக்குபையில் போட்டு மூட்டை கட்டி, அதை மோட்டார் சைக்கிளில்அஞ்சேகொப்பலு ரயில் நிலையம் அருகே கொண்டுசென்று தண்டவாளத்தில் வீசி பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஹேமந்த் தத்தாவை கைது செய்தனர். தொடர்ந்துஅவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி