தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Odisha:பிப்.14இல் சிங்கிள் மாணவிகளுக்கு அனுமதியில்லை!கல்லூரி நோட்டீஸால் பரபரப்பு

Odisha:பிப்.14இல் சிங்கிள் மாணவிகளுக்கு அனுமதியில்லை!கல்லூரி நோட்டீஸால் பரபரப்பு

Jan 25, 2023, 12:32 PM IST

google News
பிப்ரவரி 14ஆம் தேதி கல்லூரி வரும் பெண்கள் ஆண் நண்பர்களுடன் வர வேண்டும். சிங்கிளாக வரும் மாணவிகளுக்கு அனுமதி இல்லை என கல்லூரி முதல்வர் கையெப்பமிட்டு ஒடிசாவிலுள்ள கல்லூரி வளாகத்தில் ஒட்டப்பட்ட சுற்றறிக்கை வைரலான நிலையில், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் சிங்பூரிலுள்ள சுவாமி விவேகாநந்தா நினைவு தன்னாட்சி கல்லூரியின் முதல்வர் கையெப்பமிட்டு விநோதமான நோட்டீஸ் ஒன்று கல்லூரி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தது.

அதில், " பிப்ரவரி 14ஆம் தேதியன்று பெண்கள் அனைவரும் குறைந்தது ஒரு ஆண் நண்பனுருடன் கல்லூரிக்கு வர வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சிங்கிளாக இருக்கும் மாணவிகள் கல்லூரி வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அன்றைய நாளில் கல்லூரி வரும் மாணவிகள் தங்களது ஆண் நண்பருடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படத்தை காட்ட வேண்டும். அன்பை பரப்புங்கள்" என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடபட்டிருந்தது.

காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி எந்த மாணவியும் சிங்கிளாக இருக்ககூடாது என்பதை முன்னிருத்தும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்திருந்தது. 

இந்த நோட்டீஸ் கல்லூரி மாணவர்களிடையே வைரலான நிலையில், பின்னர் இதுபோன்றதொரு அறிவிப்பை வெளியிடவில்லை என கல்லூரியின் முதல்வர் விஜய் குமார் பத்ரா தெரிவித்த நிலையில், இதுபோலியான சுற்றறிக்கை என தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர் கவலை தெரிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், இந்த போலி நோட்டீஸ் தொடர்பாக ஜகத்சிங்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி முதல் விஜய் குமார் பத்ரா கூறியதாவது: "பிப்ரபவி 14 அன்று கல்லூரி வரும் அனைத்து பெண்களும் ஆண் நண்பர்களுடன் வர வேண்டும் என வெளியாகியிருக்கும் அறிவிப்பு போலியானது. இதுபோன்றதொரு சுற்றறிக்கையை நான் வெளியிடவில்லை. அதிலுள்ள எனது கையெழுத்து போலியானது. அதுமட்டுமில்லாமல் இதில் எந்தவொரு அதிகாரப்பூர்வமான எண்களும் இல்லாமல் இருப்பதில் இருந்தே இந்த நோட்டீஸ் உண்மையானது இல்லை என நிருபணம் ஆகியுள்ளது. 

இதுதொடர்பாக காவல்நிலையத்தி் புகார் அளிக்கப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது"

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி