தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Money Rain: லைக் வாங்க பணத்தை வீசிய ஆசாமி கைது

Money rain: லைக் வாங்க பணத்தை வீசிய ஆசாமி கைது

Jan 25, 2023, 12:44 PM IST

சமூக வலைதளங்களில் லைக் வாங்க பெங்களூரில் பணத்தை வீசி எரிந்தவர் கைது
சமூக வலைதளங்களில் லைக் வாங்க பெங்களூரில் பணத்தை வீசி எரிந்தவர் கைது

சமூக வலைதளங்களில் லைக் வாங்க பெங்களூரில் பணத்தை வீசி எரிந்தவர் கைது

கர்நாடக மாநிலம், பெங்களூரில் மேம்பாலம் ஒன்றின் மீது ஏறி திடீரென தன்னிடம் இருந்து 10 ரூபாய் நோட்டுகளை கீழே வீசி எறிந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

கர்நாடகாவில் பெங்களூரின் கே.ஆர்.மார்கெட் மேம்பாலம் பகுதியில் நேற்று 10 ரூபாய் நோய்டுகளை நாகரீக உடை அணிந்தவர் எறிய தொடங்கினார் இதை சற்றும் எதிர்பாராத அப்பகுதியில் இருந்தவர்கள் ரூபாய் நோட்டுகளை கைகளில் பிடிக்கவும், கீழே இருந்த ரூபாய் நோட்டுகளை அள்ளி எடுக்கவும் முயன்றனர். அவ்வழியே வாகனத்தில் வந்தவர்களும் வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டு ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றனர்.

அருண்

பெங்களூரின் கே.ஆர்.மார்கெட் மேம்பாலம் இதனால் முடங்கியது. இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் தீடரென மேம்பாலத்தின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கையில் வைத்திருந்த பையில் இருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து வீசத் தொடங்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் அந்த நபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்தப் பகுதியில் அந்த நபர் தப்பியோடிவிட்டார்.

பணத்தை வாரி இறைத்த அந்த நபர் கோட் சூட் அணிந்தபடி நல்ல படித்தவர் போன்று இருக்கிறார். அவரது கழுத்தில் சுவரில் மாட்டும் கடிகாரம் ஒன்றும் தொங்கிக் கொண்டிருந்தது.

இதையடுத்து பாலத்தின் இரு பக்கங்களிலும் பணத்தை வாரி இறைத்த அந்த நபர் நாகர் பாடியைச்சேர்ந்த முன்னாள் கபடி வீரர் அருண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அருணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சமூக வலைதளங்களில் லைக்குகள் வாங்குவதற்காகவே இவ்வாறு செய்தாகவும்அதற்காக ரூபாய் 4500 வரை தூக்கி எறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி