தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Khushbu : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார் குஷ்பூ!

Khushbu : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார் குஷ்பூ!

Divya Sekar HT Tamil

Feb 28, 2023, 01:40 PM IST

இன்று டெல்லி தேசிய ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பூ பொறுப்பேற்றுக்கொண்டார்.
இன்று டெல்லி தேசிய ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பூ பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று டெல்லி தேசிய ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பூ பொறுப்பேற்றுக்கொண்டார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ நியமிக்கப்பட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தேசிய மகளிர் ஆணையம், மகளிர் நலன் தொடர்பான கொள்கைகளை உருவாக்கி, அவற்றை இந்திய அரசுக்கு பரிந்துரைக்கும் அமைப்பு ஆகும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

இந்தப்பதவியில் அடுத்த 3 ஆண்டுகள் வரையிலோ அல்லது 65 வயது வரையோ இதில் எது விரைவில் வருகிறதோ, அந்த காலம் வரை அவர் பதவி வகிப்பார் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்தப்பதவிக்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் வரும் காலத்தில் தன்னுடைய நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் குஷ்பு பேசியிருக்கிறார். அதில் “முதலில் இந்தப்பதவியை எனக்கு அளித்த மோடி அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், NCW -வில் உள்ள அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண்களுக்காக நான் குரல் கொடுப்பதை பார்த்து, என்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து இருக்கிறார்கள். அதிகபட்சமாக என்னுடைய பங்களிப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமே இருக்கும். தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் அதிகமாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை நாம் தினமும் நாளிதழ்களில் பார்க்கிறோம். எங்கேயாவது ஒரு இடத்தில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பெண்களுக்கு இது போன்ற கொடுமைகள் இழைக்கப்படும் போது, அவர்கள் தைரியமாக முன் வந்து பேச மறுக்கிறார்கள். நான் தமிழ்நாட்டில் வாழும் பெண்களுக்கு சொல்லக்கூடிய விஷயம் ஒன்றுதான். உங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றி தைரியமாக முன் வந்து பேசுங்கள்”எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று டெல்லி தேசிய ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி