தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala: மகள்களுக்காக 29 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருமணம் - ஏன் தெரியுமா?

Kerala: மகள்களுக்காக 29 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருமணம் - ஏன் தெரியுமா?

Mar 09, 2023, 08:11 AM IST

Kerala Couple: கேரளாவில் மகள்களுக்காக 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெற்றோர் திருமணம் செய்து கொண்டனர்.
Kerala Couple: கேரளாவில் மகள்களுக்காக 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெற்றோர் திருமணம் செய்து கொண்டனர்.

Kerala Couple: கேரளாவில் மகள்களுக்காக 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெற்றோர் திருமணம் செய்து கொண்டனர்.

உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த மகிழ்ச்சியான தினத்தில் தனது மூன்று மகள்களுக்காகக் கேரளாவைச் சேர்ந்த பெற்றோர் 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்டார் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Fact Check: 2024ல் மோடி பிரதமராக்குவதற்கு ராகுல் காந்தி ஆதரவளித்ததாக பரவும் வீடியோவில் உண்மை உள்ளதா?

Kangana Ranaut: ’50 எல்.ஐ.சி பாலிஸிக்களா!’ கங்கனாவின் சொத்து மதிப்பு குறித்து வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!

Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த - உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்

Google CEO Sundar Pichai: ‘இது புதுசு’-கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷன் அறிமுகம்.. இதுல என்ன ஸ்பெஷல்!

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுக்கூர் (53). வழக்கறிஞரான இவர் அவ்வப்போது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் ஷீனா என்ற பெண்ணை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கதீஜா ஜாஸ்மின், பாத்திமா ஜெபின், பாத்திமா ஜோசா என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர்.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சுக்கூர்- ஷீனா தம்பதி தனிநபர் ஷரியத் முறைப்படி அப்போது திருமணம் செய்துள்ளனர். இந்த சட்டப்படி ஆண் வாரிசு இல்லாத இந்த தம்பதியின் மகள்களுக்குச் சொத்துக்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஷரியத் முறைப்படி, ஆண் வாரிசு இல்லாத தம்பதியின் சொத்துக்களில் மூன்றில் இரண்டு பங்கு மூன்று மகள்களுக்கும் செல்லும். எஞ்சிய ஒரு பங்கு சுக்கூரின் சகோதரர்களுக்குச் செல்லும். ஆனால் அதில் அவருக்கு விருப்பமில்லை.

தனது சொத்துக்கள் அனைத்தும் தனது மகளுக்குச் செல்ல வேண்டும் என நினைத்த சுக்கூர், கேரளா சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறப்புத் திருமண சட்டத்தின் படி இந்த தம்பதி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் மூன்று மகள்களும் பங்கேற்ற நிலையில், பெண்கள் தின பரிசாகும் தங்களது திருமணத்தைப் பெற்றோர்கள் சமர்ப்பித்துள்ளனர். 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்த பெற்றோருக்கு கேக் வெட்டி மகள்கள் திருமணத்தைக் கொண்டாடினர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி