தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பணக்கார முதல்வர்களில் ஜெகன் முதலிடம்! ஸ்டாலினுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

பணக்கார முதல்வர்களில் ஜெகன் முதலிடம்! ஸ்டாலினுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Kathiravan V HT Tamil

Apr 13, 2023, 02:13 PM IST

List of richest CM: ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மொத்தம் 510 கோடி சொத்துக்களுடன் நாட்டின் பணக்கார முதலமைச்சராக உள்ளார் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
List of richest CM: ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மொத்தம் 510 கோடி சொத்துக்களுடன் நாட்டின் பணக்கார முதலமைச்சராக உள்ளார் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

List of richest CM: ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மொத்தம் 510 கோடி சொத்துக்களுடன் நாட்டின் பணக்கார முதலமைச்சராக உள்ளார் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மொத்தம் 510 கோடி சொத்துக்களுடன் நாட்டின் பணக்கார முதலமைச்சராக உள்ளார் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது இந்தியா முழுவதும் உள்ள 30 மாநில முதலமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள் நெறும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் இதில் விதிவிலக்கு, அவரின் சொத்து மதிப்பு வெறும் 15 லட்சம் என்று  ஏடிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Fact Check: 2024ல் மோடி பிரதமராக்குவதற்கு ராகுல் காந்தி ஆதரவளித்ததாக பரவும் வீடியோவில் உண்மை உள்ளதா?

Amit Shah About Modi: ‘2029ஆம் ஆண்டுக்கு பின்னும் நரேந்திர மோடிதான் தலைவர்!’ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி!

Kangana Ranaut: ’50 எல்.ஐ.சி பாலிஸிக்களா!’ கங்கனாவின் சொத்து மதிப்பு குறித்து வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!

Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த - உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்

1ஜெகன் மோகன் ரெட்டிஆந்திர பிரதேசம் 510 கோடி+
2பேமா காண்டுஅருணாச்சல பிரதேசம் 163 கோடி+
3நவீன் பட்நாயக்ஒடிசா 63 கோடி+
4நெப்பீயு ரியோநாகலாந்து 46 கோடி+
5என்.ரங்கசாமிபுதுச்சேரி 38 கோடி+
6கே.சந்திரசேகரராவ்தெலங்கானா 23 கோடி+
7பூபேஷ் பாஹல்சத்திஸ்கர் 23 கோடி+
8ஹமந்த பிஸ்வா சர்மாஅசாம் 17 கோடி+
9காண்ட்ராட் சர்மாமேகலயா 15 கோடி+
10மாணிக் ஷாதிரிபுரா 13 கோடி+
11ஏக்நாத் ஷிண்டேமகாராஷ்டிரா 11 கோடி+
12பிரமோத் சாவந்த்கோவா 9 கோடி+
13பசவராஜ் பொம்மைகர்நாடகா 8 கோடி+
14மு.க.ஸ்டாலின்தமிழ்நாடு 8 கோடி+
15ஹேமந்த் சோரன்ஜார்க்கண்ட் 8 கோடி+
16பூபேந்திர பாதல்குஜராத் 8 கோடி+
17சுக்வீந்தர் சிங்ஹிமாச்சல பிரதேசம் 7 கோடி+
18சிவராஜ் சிங் சௌகான்மத்திய பிரதேசம் 7 கோடி+
19அசோக் கெலாட்ராஜஸ்தான் 6 கோடி+
20புஷ்கர் சிங் தாமிஉத்தராகண்ட் 4 கோடி+
21பிரேம் சிங் தமாங்சிக்கிம் 3 கோடி+
22ஜோரம்தங்காமிசோரம் 3 கோடி+
23அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லி 3 கோடி+
24நிதீஷ்குமார்பீகார் 3 கோடி+
25பகவத் மான்பஞ்சாப் 1 கோடி+
26யோகி ஆதித்தியநாத்உத்தரப்பிரதேசம் 1 கோடி+
27என்.பைரென் சிங்மணிப்பூர் 1 கோடி+
28மோகன்லால் கட்டார்ஹரியானா 1 கோடி+
29பினராயி விஜயன்கேரளா 1 கோடி+
30மம்தா பானர்ஜிமேற்கு வங்கம் 15 லட்சம்+

பகுப்பாய்வு செய்யப்பட்ட 30 முதல்வர்களில், 29 பேர் (97 சதவீதம்) கோடீஸ்வரர்கள், ஒவ்வொரு முதல்வரின் சராசரி சொத்து மதிப்பு 33.96 கோடி என்று ஏடிஆர் தெரிவித்துள்ளது. ஏடிஆர் அறிக்கையின்படி, 30 முதல்வர்களில் 13 பேர் (43 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

சொத்து மதிப்பில் முதல் மூன்று இடங்களில் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி (510 கோடிக்கு மேல்), அருணாச்சலப் பிரதேசத்தின் பெமா காண்டு (163 கோடிக்கு மேல்), ஒடிசாவின் நவீன் பட்நாயக் (63 கோடிக்கு மேல்) ஆகியோர் உள்ளனர்.

மிகக்குறைந்த சொத்துக்கள் உள்ள மூன்று முதல்வர்கள் – மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி (ரூ.15 லட்சத்துக்கு மேல்), கேரளாவின் பினராயி விஜயன் (ரூ.1 கோடிக்கு மேல்) மற்றும் ஹரியானாவின் மனோகர் லால் (ரூ.1 கோடிக்கு மேல்) என ஏடிஆர் தெரிவித்துள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் டெல்லியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவருக்குமே 3 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

அந்த அறிக்கையின்படி, 46 வயதான ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு 510 கோடிக்கு மேல் உள்ளது. இவரது வருமானம் 50 கோடி ரூபாய். இரண்டாவது பெரிய பணக்கார முதல்வர் பெமா காண்டுவின் சுய வருமானம் மற்றும் கடன் பூஜ்ஜியம் ஆகும், அவருடைய மொத்த சொத்து 163 கோடிக்கும் அதிகமாக உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சுய வருமானம் 2 லட்சத்துக்கும் அதிகமாகவும், மொத்த சொத்து மதிப்பு 3 கோடிக்கு மேல் உள்ளது. 

8 கோடிக்கும் மேலான சொத்துக்கள் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 14ஆவது இடத்தில் உள்ளார் என ஏடிஆர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி