தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  International Day Of Girl Child : பெண் கல்வி வழியாக பாலின சமத்துவம் – சர்வதேச பெண் குழந்தைகள் நாளின் கருப்பொருள்!

International Day of Girl Child : பெண் கல்வி வழியாக பாலின சமத்துவம் – சர்வதேச பெண் குழந்தைகள் நாளின் கருப்பொருள்!

Priyadarshini R HT Tamil

Oct 11, 2023, 06:00 AM IST

International Day of Girl Child : 2011ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி, ஜக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டத்தில் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் என்று அறிவிக்கப்பட்டது.
International Day of Girl Child : 2011ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி, ஜக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டத்தில் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் என்று அறிவிக்கப்பட்டது.

International Day of Girl Child : 2011ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி, ஜக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டத்தில் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் என்று அறிவிக்கப்பட்டது.

பெண் குழந்தைகளின் உரிமைகளை அங்கீகரிப்பது, உலகம் முழுவதும் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சிந்திப்பது இந்த நாளின் நோக்கம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

உலக பெண் குழந்தைகள் தினம், பெண் குழந்தைகள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசுவது மற்றும் அவர்களின் உரிமை, முன்னேற்றம் ஆகியவை குறித்து வலியுறுத்துவது இதன் நோக்கமாகும்.

பெண்களுக்கு பாதுகாப்பு, கல்வி, ஆரோக்கியமான வாழ்வு ஆகிய அனைத்தையும் அனைத்து வயதிலும் பெறும் உரிமையை பெற்றவள். பெண்களை ஆதரித்து, அவர்களுக்கு போதிய கல்வியை வழங்கினால், அவர்கள் இந்த உலகத்தையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்கள். அவர்கள் இன்று முன்னேறிய பெண்களாகவும், நாளைய தொழிலாளர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும், இல்லத்தலைவிகளாகவும், வழிகாட்டிகளாகவும், அரசியல் தலைவிகளாகவும் மற்றும் தாய்மார்களாகவும் விளங்குவார்கள்.

இன்று அவர்களின் உரிமைகளை நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது கட்டாயம். அதுவே உலகின் வளமான எதிர்காலத்துக்கு உதவும். ஏனெனில் இன்று உலகம் எதிர்கொள்ளும் பருவநிலை மாற்றம், அரசியல் போர், பொருளாதார வளர்ச்சி, நோய் தடுப்பு, நீடித்த வளர்ச்சி என அனைத்திலும் அவர்களுக்கு சமமான பங்கு உள்ளது.

பெண்களின் முன்னேற்றம்தான் பாலின சமத்துவத்துக்கான திறவுகோல் என்று யுனெஸ்கோ நம்புகிறது. நீடித்த வளர்ச்சி மற்றும் உலகின் அமைதிக்கும், பெண்களை ஆதரித்து, அவர்களுக்கு சம வாய்ப்புக்களை வழங்கி, அவர்களின் குரலை முழுமையாக ஒலிக்கவும், கேட்கவும் செய்வதால் மட்டுமே முடியும். வளரிளம் பெண்கள், உலகம் முழுவதும் பள்ளியில் இடை நின்றுவிடுகிறார்கள். இவ்வாறு நிறுப்பட்டு திருமணத்திற்கோ, குழந்தை தொழிலாளியாகவோ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். எனவே இந்த நாளை யுனெஸ்கோ, அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி மற்றும் நல்ல வாழ்க்கை கொடுப்பதற்காக கடைபிடிக்கிறது.

முதன்முதலாக சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிறது. பல வழிகளில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. யுனெஸ்கோவின் தரவுப்படி தற்போது 50 மில்லியன் குழந்தைகள் பள்ளி செல்கிறார்கள்.

இந்த முன்னேற்றம் தொடர்ந்துகொண்டே செல்ல நாம் நிறைய முன்னெடுப்புக்களை செய்துகொண்டே செல்ல வேண்டும். பல பெண்கள் அவர்களின் கல்வி உரிமையை இன்றும் பெறாமல் இருக்கிறார்கள். அவர்களை ஏழ்மை, குழந்தை திருமணம், சிறிய வயதில் கருவுறுதல் மற்றும் குழந்தை அல்லது வீட்டுவேலை செய்வது என இவையனைத்தும் தடுக்கிறது. இன்னும் 122 மில்லியன் பெண் குழந்தைகள் உலகம் முழுவதும் பள்ளி செல்லாமல் இருக்கிறார்கள்.

ஒரு பெண் குழந்தையை கூட விடாமல் கல்வி கொடுக்க வேண்டும் என்று உலகநாடுகள் 2022ம் ஆண்டு உறுதியளித்தன. கல்வி வழியாக பாலின சமத்துவம் என்பதை வலியுறுத்தி யுனெஸ்கோ பெண்களுக்கு கல்வி வழங்கும் முன்னெடுப்பை செய்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி